×
 

“தில் இருந்தால் தொகுதிக்குள்ள கால் வை... கொந்தளிப்புடன் தயாராக இருந்த அதிமுகவினர் ... ஓட்டம் பிடித்த மரகதம் குமரவேல்...!

முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினருக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் கருப்பு கொடி  தகவல் அறிந்து ஓட்டம் தவெக கட்சிகளுக்கு அதிமுகவினர் மிரட்டல்

முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு தவெக இணைந்தார். இன்று முதலமைச்சர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் விழாவிற்கு வருகை தந்த அவருக்கு அதிமுகவினர் கருப்புக் கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து முன்னால் எம்எல்ஏ மரகதம் குமரவேல் ஓட்டம். 

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சட்டமன்ற தனி தொகுதியின் கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர் மரகதம் குமரவேல் அவர்கள்
 தவெக கட்சிக்கு ஆதரவு தெரிவித்து இருந்தார் மேலும் அக்கட்சியிலிருந்து நான்கு பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்து விட்டு  தவெகவில் இணைந்தனர். 

இதில்  இவரும் ஒருவர் ஆகவே இவர் இன்று மதுராந்தகம் அருகே உள்ள முதுகரை கிராமத்தில் நடைபெற இருந்த தமிழக வெற்றி கழகம் சார்பில் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களின் பிறந்த நாள் விழாவில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற இருந்தது அதற்காக  வருகை தர இருந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து மதுராந்தகம் தெற்கு அதிமுக ஒன்றிய கழக செயலாளர் கார்த்திகேயன் அவர்கள் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கருப்புக்கொடி
காட்ட உள்ளனர். இந்த தகவல் அறிந்து தனது நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டு சென்றார் மரகதம் குமரவேல்.

இதையும் படிங்க: மேகதாது உரிமை மீறல் பிரச்சனை..! பேரவையில் இபிஎஸ் கடும் வாக்குவாதம்..!! அதிமுகவினர் வெளிநடப்பு..!!

அப்பொழுது அங்கு நடைபெற்ற முதலமைச்சர் அவர்களின் பிறந்தநாள் விழாவிற்கு காரில் வருகை தந்த தவெக பொறுப்பாளரை அங்கு இருந்த அதிமுகவினர் மிரட்டி அனுப்பி வைத்தனர் இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

அதிமுக சார்பில் வெற்றி பெற்று கூட்டணி கட்சியையும் மறந்து தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு சென்ற மரகதம் குமரவேல் எந்த காரணத்தை கொண்டும் இப்பகுதிக்கு வரக்கூடாது எனவும் கிராமத்தில் இதுவரை கட்சி சார்பில் எந்த பிரச்சினையும் ஏற்பட்டது இல்லை இவர் இப்பகுதியில் உள்ள இளைஞர்களை கொண்டு அதிமுக  பேனர் மற்றும்  போஸ்டர் கிழிப்பது போன்ற கீழ்த்தரமான வேலைகளை செய்து வருகிறார் ஆகவே இவர் இப்பகுதிக்கு வருவதை கடுமையாக எதிர்ப்பதாக எதிர்ப்பு தெரிவித்தனர்

இதையும் படிங்க: மதுரையில் காலியாகும் அதிமுக கூடாரம்! தவெக தாவும் நிர்வாகிகள்! உள்ளாட்சி தேர்தலுக்கு வியூகம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share