×
 

விஜயை பார்க்க வந்த தொண்டருக்கு வலிப்பு... உடனடி சிகிச்சை அளித்த மருத்துவர்கள்...!

ஈரோட்டில் விஜயை பார்க்க வந்த தொண்டர் ஒருவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்ட நிலையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நடிகர் விஜய், ஈரோடு மாவட்டத்தில் இன்று நடத்தவிருக்கும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி, கரூரில் செப்டம்பர் மாதம் ஏற்பட்ட துயர சம்பவத்துக்குப் பிறகு அவரது முதல் பெரிய பொதுக்கூட்டமாகும். இதனால், பங்கேற்பாளர்களின் பாதுகாப்புக்கு முன்னெச்சரிக்கையாக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நிகழ்ச்சி நடைபெறும் இடம் ஈரோடு மாவட்டம், பெருந்துறை தாலுகாவில் உள்ள விஜயமங்கலம் டோல்கேட் அருகேயாகும்.

இங்கு சுமார் 19 ஏக்கர் பரப்பளவில் தளம் அமைக்கப்பட்டுள்ளது.காவல்துறையின் அனுமதியுடன் நடைபெறும் இந்நிகழ்ச்சிக்கு, ஈரோடு, கோவை, திருப்பூர், நீலகிரி ஆகிய நான்கு மாவட்டங்களிலிருந்து 1,500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில் மைதானம் பல பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பகுதியிலும் சுமார் 500 பேர் மட்டுமே நிற்கும் வகையில் இரும்புத் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. மைதானம் முழுவதும் 40 முதல் 60 வரையிலான கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, தொடர்ச்சியான கண்காணிப்பு நடைபெறுகிறது.

அவசர தொடர்புக்கு 40 வாக்கி-டாக்கிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.மருத்துவ ஏற்பாடுகள் மிகவும் விரிவாகச் செய்யப்பட்டுள்ளன. அவசர சிகிச்சைக்காக 24 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன. இவற்றுடன் 72 மருத்துவர்களும் 120 செவிலியர்களும் பணியமர்த்தப்பட்டுள்ளனர். தீ விபத்து போன்ற அபாயங்களை எதிர்கொள்ள மூன்று தீயணைப்பு வாகனங்களும் நிறுத்தப்பட்டுள்ளன. கூட்டம் சிதறிச் செல்ல 14 தனி வெளியேறும் வழித்தடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வாகன நிறுத்தத்துக்கு சுமார் 60 ஏக்கர் பரப்பளவில் தனி இடம் ஒதுக்கப்பட்டு, குறிப்பாக இருசக்கர வாகனங்களுக்கு 20 ஏக்கர் தனியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: உங்க விஜய் நான் வரேன்…. குஷியில் தொண்டர்கள்… ஒரே VIBE தான்…!

தொண்டர்களுக்கு போதுமான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கும் சூழ்நிலையில் விஜயை பார்ப்பதற்காக ஈரோட்டில் காலை முதலே மக்கள் புதிய தொடங்கினர். தொண்டர்களில் ஒருவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டுள்ளது. வலிப்பு வந்த அந்த தொண்டருக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து அவரை ஆம்புலன்ஸில் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். இதனால் சற்று பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. 

இதையும் படிங்க: இனி சரவெடி தான்… ஈரோட்டில் இன்று மக்கள் சந்திப்பு… கோவை ஏர்போர்ட்டுக்கு புறப்பட்ட விஜய்…!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share