×
 

“ஒண்ட வந்த பிடாரி ஊர் பிடாரியை ஓட்டுச்சாம்..” - தவெகவில் உச்சக்கட்ட உட்கட்சி மோதல்... வைரலாகும் ஆடியோ...!

தமிழக வெற்றிக் கழகத்தில் உட்கட்சி மோதல்  சோழவந்தான்  பேரூர் கழக செயலாளர் - எம்.எல்.ஏ. கருப்பையா இடையிலான சர்ச்சை ஆடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருவதால் பரபரப்பு

​மதுரை மாவட்டம், சோழவந்தான் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க.) பேரூராட்சிச் செயலாளராகப் பணியாற்றி வரும் சுரேஷ் மற்றும் அதே தொகுதியின் எம்.எல்.ஏ. கருப்பையா ஆகியோருக்கு இடையே ஏற்பட்டுள்ள மோதல் குறித்த ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கடந்த 25 ஆண்டுகளாக நடிகர் விஜய் மக்கள் இயக்கத்தில் இணைந்து பல்வேறு சமூகப் பணிகளைச் செய்து வந்தவர் சுரேஷ். த.வெ.க. கட்சி தொடங்கப்பட்ட பிறகு, கட்சியின் தீவிர விசுவாசியாகச் செயல்பட்டு வரும் சுரேஷ், சோழவந்தான் பேரூராட்சிச் செயலாளராக இருந்து வருகிறார். 

இதனிடையே, சமீபத்தில் அதிமுகவிலிருந்து விலகி த.வெ.க.-வில் இணைந்த கருப்பையா, அக்கட்சியின் சார்பில் எம்.எல்.ஏ.-வாக  பொறுப்பேற்றார். இது, ஆரம்ப காலத்திலிருந்தே உழைத்த தொண்டர்களுக்குப் போதிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்ற அதிருப்தியைத் தொண்டர்கள் மத்தியில் உருவாக்கியிருந்தது.

இதையும் படிங்க: சிறைக்குள் சபரி வர்மனுக்கு நடந்தது என்ன..? யார் பொறுப்பு..? வேல்முருகன் சரமாரி கேள்வி..!!

மேலும் சில நாட்களுக்கு முன்பு  25 ஆண்டு காலமாக  உழைக்கும் தங்களை ஓரங்கட்டுவதாகும் தற்போது வந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாகவும் எம்.எல்.ஏ கருப்பையா உடன் இருக்கும் நிர்வாகிகள் எம்.எல்.ஏ வை பார்க்க விடுவதில்லை என எம்எல்ஏ கருப்பையாவிடம் சென்று புகார் அளித்தார்

 பின்னர் இது தொடர்பாகச் சுரேஷ் ஊடகங்களுக்குப் பேட்டி அளித்திருந்தார். இந்நிலையில், காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு மரியாதை செலுத்துவது தொடர்பாக, இன்று சுரேஷ் தொலைபேசி வாயிலாக எம்.எல்.ஏ. கருப்பையாவைத் தொடர்பு கொண்டார். அந்த உரையாடலின் போது, சுரேஷைப் பார்த்துக் கடுமையாகப் பேசிய கருப்பையா, "நீதானே டிவியில் பேட்டி கொடுத்தவர்? நீ உன்னை நகரச் செயலாளர் என்று கூறுகிறாய் முதலில் கட்சித் தலைமை அலுவலகத்திற்குச் சென்று பொதுச் செயலாளர் கடிதம் வாங்கி வா" என்று ஆவேசமாகக் கூறி, தொலைபேசியைத் துண்டித்தார்.

​இந்த உரையாடல் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.  நீண்டகாலமாகக் கட்சிக்காக உழைத்த தொண்டரை, புதிதாக இணைந்த ஒரு மக்கள் பிரதிநிதி மரியாதையின்றி நடத்தியது, த.வெ.க. தொண்டர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.  இந்த விவகாரம் குறித்துக் கட்சித் தலைமை என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதைத் தொண்டர்கள் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர்.
 

இதையும் படிங்க: இதுக்கு ஒரு என்டே இல்லையா?... இரவோடு இரவாக தெருவில் இறங்கிய மக்கள்... விஜய் ஆட்சிக்கு சிக்கல்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share