ஆணியே புடுங்க வேணாம்... தவெக நிர்வாகிகளுக்கு கடும் எதிர்ப்பு... சத்துணவு ஊழியர்கள் போராட்டத்தில் பரபரப்பு...!
அரை மணி நேரத்திற்கு மேலாக சத்துணவு ஊழியர் சங்க நிர்வாகிகளை சமாதானம் செய்த பின் போராட்ட களத்தில் ஆதரவு தெரிவித்து உரையாற்றி சென்ற தவெக.வினர்.
போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க வந்த தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகளை தடுத்து நிறுத்திய சத்துணவு ஊழியர்கள். எங்கள் போராட்டத்தை வைத்து அரசியல் ஆதாயம் தேட வேண்டாம் என எதிர்ப்பு.
பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஈரோட்டில் காளை மாட்டு சிலை அருகே சத்துணவு ஊழியர்களின் போராட்டம் இன்று நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தமிழக வெற்றிக்கழக மாவட்ட செயலாளர் பாலாஜி தலைமையில் நிர்வாகிகள் அங்கு வந்தனர். அப்போது அங்கிருந்த சத்துணவு ஊழியர் சங்க நிர்வாகிகள் தவெக.வினரை தடுத்து நிறுத்தினர். எங்களது போராட்டத்தை அரசியலாக்க வேண்டாம், இங்கு வந்து நீங்கள் அரசியல் பேச வேண்டாம், எங்களுக்கு ஆதரவு தெரிவிப்பதாக இருந்தால் உங்கள் தலைவர் மூலமாக அறிக்கை மட்டும் வெளியிடுங்கள் அது போதும், இப்போது இங்கிருந்து செல்லுங்கள் என கூறினர்.
இதையும் படிங்க: “நேற்று கமல்... இன்னைக்கு விஜய்... நாளைக்கு சிம்பு... எந்த கொம்பன் வந்தாலும்...” - படு ஓபனாக சவால் விட்ட சி.வி.சண்முகம்...!
ஆனாலும் ஆதரவு தெரிவித்து உரையாற்றி செல்வதாக தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் சத்துணவு ஊழியர் சங்க நிர்வாகிகளுடன் பேசினர். சுமார் அரை மணி நேரம் காத்திருந்து அவர்களை சமாதானப்படுத்திய தவெக நிர்வாகிகள், போராட்டத்தில் அரசியல் பேசக்கூடாது என்ற உத்தரவாதத்தின் பேரில், போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பேசி சென்றனர்.
இதையும் படிங்க: தனித்துப் போட்டி என திமுகவால் அறிவிக்க முடியுமா? தவெக அருண்ராஜ் சவால்..!