×
 

#Viralvideo அவுட் ஆப் கண்ட்ரோலில் தவெக நிர்வாகிகள்... அரசு பள்ளிக்குள் நுழைந்து அட்ராசிட்டி...!

சட்டவிரோதமான முறையில் அரசு பள்ளியை ஆய்வு செய்த தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கபடுமா..?

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட குன்னலூர் ஊராட்சியை சேர்ந்த எக்கல் பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தமிழக வெற்றி கழக மாவட்ட துணை செயலாளர் பொறுப்பில் உள்ள அகிலன் என்பவர் இந்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார். பள்ளியில் குடிநீர் வசதி, சமையலறை வசதி, மற்றும் கட்டிட பராமரிப்பு உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட்டு அங்கிருந்தவர்களிடம் விசாரணை செய்தார். 

இவர் மக்கள் பிரதிநிதியாகவும் இல்லாமல், அரசு அதிகாரியாகவும் இல்லாமல் ஒரு அரசு பள்ளியை ஆய்வு செய்தது சட்ட விரோதமானது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியில் அமர்ந்த பிறகு அக்கட்சி நிர்வாகிகள் பல்வேறு இடங்களிலும் தாங்கள் தான் எஜமானர்கள் என்ற போர்வையில் அனைவரையும் மிரட்டும் துணியில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: விரைவில்... போதை சாம்ராஜ்யம் வேரோடு ஒழிப்பு... அமைச்சர் ராஜ்மோகன் உறுதி..!!

இதனை தட்டிக் கேட்க வேண்டிய தமிழக வெற்றிக் கழக நிர்வாகம் கண்டும் காணாமல் உள்ளது. இதனால் பொதுமக்கள் தான் கடும் அவதி அடைகின்றனர். 

இது மட்டுமில்லாமல் இந்த தமிழக வெற்றிக்கழக மாவட்ட இணை செயலாளர் அகிலன் என்பவர் தனது பிறந்த நாளை இடும்பாவனம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கேக் வெட்டி கொண்டாடியதாக கூறப்படுகிறது.  தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளின் அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

இதையும் படிங்க: ரெடியா..? சாதித்த மாணவர்களுக்கு சிறகாகும் CM விஜய்..! விரைவில் தவெக கல்வி விருது..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share