×
 

இதை மிஸ் பண்ணிட்டீங்களே விஜய்... காலையிலேயே பரபரப்பு... கையில் காலி பாட்டிலுடன் தவிக்கும் தொண்டர்கள்...!

காலை முதல் இரவு வரை தொண்டர்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் தண்ணீர் விநியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு வரும் இன்று மதுரை மாவட்டத்தில் உள்ள பாரபத்தி பகுதியில் நடைபெற உள்ளது. மதுரையிலிருந்து தூத்துக்குடி செல்லும் நெடுஞ்சாலையில் பாரபத்தி- ஆவியூர் பகுதியில் 600 ஏக்கர் பரப்பளவுள்ள மைதானத்தில் மாநாட்டு வேலைகள் விரைவாக நடந்து வருகிறது.

கடந்த முறை விக்கிரவாண்டி மாநாட்டின் போது தொண்டர்கள் குடிக்க தண்ணீர் கிடைக்காமல், சாப்பிட உணவு கிடைக்காமல் திண்டாடினர். எனவே இந்த மாநாட்டில் தண்ணீர் தட்டுப்பாடு இருக்க கூடாது என்பதை கருத்தில் கொண்டு தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், ஒரு புதிய திட்டத்தை வந்து கொண்டு வந்திருந்தார். 

குறிப்பாக மிகப்பெரிய ஒரு ஆர்ஓ பிளான்ட்ல மூலமாக அங்கிருந்து நேரடியாக ராட்சத தொட்டியில் தண்ணீர்கள் நிரப்பப்பட்டு, காலை முதல் இரவு வரை தொண்டர்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் தண்ணீர் விநியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: காலையிலேயே கட்டிங்.. காற்றில் பறந்த விஜய் கட்டளை... தவெக மாநாட்டு திடலிலேயே போதையேற்றிய இளைஞர்கள்...!

மாநாட்டு திடலுக்கு வெளியிலும் கூட பிளாஸ்டிக் டேங்குகள் மூலமாக அங்காங்கே தண்ணீர் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. அதேபோல் இந்த முறை குறைந்த விலையில் உணவு விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதோடு, சிறு சிறு தற்காலிக தள்ளுவண்டி கடைகளும் ஏராளமான அளவில் முளைத்துள்ளன. இதனால் உணவு தட்டுப்பாடு ஏற்படுவதற்கான வாய்ப்பும் குறைந்துள்ளது. 

அதேபோல் மின்சார வயர்களை அகற்றியது, மருத்துவர்கள், செலிவியர்களுடன் மருத்துவ சேவை முகாம்கள் அமைத்தது, ஆம்புலன்ஸ் செல்ல தனி வழி அமைத்து, 500 ஆம்புலன்களை திடலில் நிறுத்திவைத்துள்ளது, பெண்களுக்கென தனி இடம் ஏற்படுத்திக் கொடுத்தது என பல்வேறு விஷயங்களில் தவெக நிர்வாகிகள் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். 

ஆனால் கழிப்பறைக்குத் தேவையான தண்ணீர் வசதி இல்லாததால் பெண் தொண்டர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். நேற்றிரவு முதலே மாநாட்டு திடலில் தங்கிய ஆண் தொண்டர்கள் கழிப்பறைக்காக வைத்திருந்த தண்ணீரை முழுவதுமாக முடித்துள்ளனர். அதுமட்டுமின்றி பெண்கள் கழிவறைகளில் இருந்த நீரையும் காலி செய்துள்ளனர். 

இதனால் இன்று காலை இயற்கை உபாதைகளை கழிக்கச் செல்ல முடியாமல் பெண்கள் திண்டாடி வருகின்றனர். மறுபக்கம் ஆண்களோ, அங்காங்கே அமைக்கப்பட்டுள்ள குடிநீர் தொட்டிகளில் இருந்து வாட்டர் பாட்டில்கள் மூலமாக தண்ணீர் பிடித்து கழிவறைகளுக்குப் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் மாநாடு தொடங்குவதற்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எல்லாத்தையும் பார்த்து பார்த்து செய்த தலைவர் விஜய், இந்த ஒரு விஷயத்தில் கோட்டைவிட்டு விட்டாரே? என பெண் தொண்டர்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர். 
 

இதையும் படிங்க: அதிகாலை முதலே குவியும் தொண்டர்கள்... தவெக மாநாட்டில் திடீர் மாற்றம்... பிளானை மாற்றிய விஜய்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share