விடிந்ததுமே அதிரடி...!! - மகளிருக்கு மாதம் ரூ.2,500 - நிதி அமைச்சர் மரிய வில்சன் கொடுத்த முக்கிய அப்டேட்...!
தமிழக முதலமைச்சர் கூறியபடி வெள்ளை அறிக்கை தயார். 2 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என தமிழக நிதி அமைச்சர் மரிய வில்சன் தகவல்
புதுச்சேரி உப்பளம் இந்திராகாந்தி விளையாட்டு மைதானம் உள்விளையாட்டு அரங்கில் புதுச்சேரி கூடைப்பந்து சங்கம் சார்பில் 76-வது ஜூனியர் தேசிய ஆண்கள் மற்றும் பெண்கள் கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டிகள் நிறைவு விழா நேற்றிரவு நடைபெற்றது.
விழாவில் சிறப்பு விருந்தினராக இந்திய கூடைப்பந்து சம்மேளன தலைவரும், தமிழக விளையாட்டு துறை அமைச்சருமான ஆதவ் அர்ஜூனா மற்றும் தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன் ஆகியோர் சிறப்பு கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்ற வீரர் வீராங்கனைகளுக்கு சாம்பியன்ஷிப் கோப்பைகள் மற்றும் பதக்கம் வழங்கி பாராட்டினர்.
ஆண்கள் பிரிவில் கர்நாடகா அணியும், பெண்கள் பிரிவில் சத்தீஸ்கர் மணியம் சாம்பியன் பட்டம் வென்றனர். ஆண்கள் பிரிவில் 2- ம் இடம் அரியானா, 3-ம் இடம் ராஜஸ்தான், பெண்கள் பிரிவில் 2-ம் இடம் கேரளம், 3-ம் இடம் தமிழக அணியும் பிடித்தனர்.
இதையும் படிங்க: “அடுத்த 30 வருஷத்துக்கு விஜய் தான் முதலமைச்சர்...” - திமுக, அதிமுகவுக்கு கிலி கிளப்பிய தவெக அமைச்சர்...!
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன், புதுச்சேரி நான் பிறந்த ஊர். இங்கு கூடைப்பந்து போட்டியில் பங்கேற்றுள்ளேன். இங்கு வந்தது பழைய நினைவுகளை அளித்துள்ளதாகவும், மேலும், அமைச்சராக பங்கேற்கும் முதல் விழாவாகவும் இது அமைந்துள்ளது என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், தமிழக முதலமைச்சர் விஜய் கூறியதைப் போல தமிழக நிதிநிலை தொடர்பாக வெள்ளை அறிக்கை தயாரிக்கும் பணி நடந்து கொண்டிருக்கிறது என்றும், இன்னும் 2 வாரத்தில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்றும், மேலும் திருத்திய பட்ஜெட் கூடிய விரைவில் தாக்கல் செய்யப்படும் என தெரிவித்தார்.
அப்போது, முதல்வர் விஜய்யின் டெல்லி பயணம் வெற்றியா, தோல்வியா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, அது மரபுசீர்முறை சார்ந்தது. முதல் முறையாக அவர் தமிழகத்தின் முதல்வராகியுள்ளார். அதனடிப்படையில் பிரதமரை சந்தித்துள்ளார். புதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் தவெக போட்டியிடுமா என்ற கேள்விக்கு, அதை தலைமை தான் முடிவு செய்யும் என்று தெரிவித்தார்.
வெள்ளை அறிக்கை தாக்கல் செய்த பின்னரே மகளிருக்கு மாதம் 2500 ரூபாய் வழங்குவது தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்படும் என தவெக அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மாநில உரிமைகளில் ஊசலாட்டம் கூடாது..! தவெக அரசுக்கு CPM கட்சி வலியுறுத்தல்..!!