சட்டம் ஒழுங்கா... அப்படினா? காவல்துறையில் நிர்வாக குளறுபடி... தவெக விளாசல்...!
காவல்துறையை நிர்வாகத்தில் குளறுபடிகள் இருப்பதாக தமிழக வெற்றி கழகம் விமர்சித்துள்ளது.
முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் கீழ் தமிழ்நாடு காவல்துறை இயங்கி வருகிறது. இந்த நிலையில் தமிழக காவல்துறையை தமிழக வெற்றிக் கழகம் விமர்சித்துள்ளது. காவல் பயிற்சிப் பள்ளிகளில் அதிகபட்ச பதவிக்காலம் மூன்று ஆண்டுகள் மட்டுமே என்றிருக்கும் நிலையில், சுமார் 84 காவலர்கள், 7 முதல் 14 ஆண்டுகள் வரை தொடர்ந்து பணியாற்றி வருவதாக வந்துள்ள செய்தி அதிர்ச்சியளிக்கிறது என்று தமிழக வெற்றி கழகம் தெரிவித்துள்ளது.
அதிலும், தற்போதைய சட்டம்-ஒழுங்கு பொறுப்பு டி.ஜி.பி. வெங்கட்ராமனும், முன்னாள் டி.ஜி.பி. சங்கர் ஜிவாலும், பதவிக்காலம் முடிந்த காவலர்களை உடனடியாக அவர்களது தாய்ப் பிரிவுக்குத் திருப்பி அனுப்பக் கோரி குறிப்பாணை அனுப்பியும், அவர்கள் மாற்றப்படாமல் இருப்பது தமிழக காவல்துறை யாருடைய தலைமையின் கீழ் இயங்குகிறது என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது என்று கூறப்பட்டு உள்ளது.
போதிய காவலர்கள் இல்லாததால் பணிச்சுமை, விடுப்பற்ற நிலை என்று காவலர்களின் உரிமைகள் கண்காணிக்கப்படாமல் இருக்கும் சூழலில், நேர்மையாக நடக்க வேண்டிய பணியிட மாற்றங்கள் கூட நடத்தப்படாமல் இருப்பது ஆட்சியாளர்களின் அலட்சியப் போக்கையே காட்டுகிறது என்றும் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தவெக பதிவு செய்யப்பட்ட கட்சி... எங்களுக்கும் அழைப்பு கொடுக்கணும்... விஜய் கடிதம்...!
ஏற்கனவே, சட்டம் ஒழுங்கு என்றால் என்ன என்று கேட்கும் நிலையில் தமிழ்நாட்டில் குற்றங்கள் அதிகரித்து வரும் சூழலில், உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டபடியே நிரந்தர டிஜிபியை நியமிக்காமல் பொறுப்பு டிஜிபியை வைத்தே மக்கள் விரோத திமுக காலம் கடத்தி வருகிறது என சாடியுள்ளது. மக்கள் பெரும் அச்சத்திலும், காவல்துறை முறையான தலைமையின்றித் திணறுவதும் உங்களுக்குத் தெரியவில்லையா என்றும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அரசியலில் புதிய திருப்பம்... Ex. எம். எல்.ஏ.க்கள் தவெகவில் ஐக்கியம்...!