×
 

”என் சொத்துக்களை எல்லாம் எடுத்துக்கோங்க... கம்பம் மக்கள் முன்னால் எமோஷ்னலான எம்.எல்.ஏ. ஜெகன்நாத் மிஸ்ரா... என்ன ஆச்சு?

​எனது சொத்துக்களை எடுத்துக்கொண்டு, முல்லைப் பெரியாறு அணையில் 152 அடி தண்ணீர் தேக்க கேரளா அரசு நடவடிக்கை எடுக்கட்டும் - கம்பம் எம்.எல்.ஏ உணர்ச்சிப்பூர்வ பேட்டி.

​தமிழக வெற்றி கழகத் தலைவரும் தமிழக முதல்வருமான விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, தேனி மாவட்டம் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜெகன்நாத்  மிஸ்ரா  அரசு மருத்துவமனையில் உள்ள உள்நோயாளிகளுக்கு பிஸ்கட் பாக்கெட்டுகள் வழங்குவதற்காகச் சென்றார்.

​அப்போது, அரசு மருத்துவமனை அருகில் உள்ள அம்மா உணவகத்திற்குள் திடீரெனச் சென்ற அவர் தோசை வாங்கிச் சாப்பிட்டுப் பார்த்து அதன் தரத்தை ஆய்வு செய்தார்.  அதனைத் தொடர்ந்து மருத்துவமனைக்குள் சென்ற அவர், நோயாளிகளிடம் ஊழியர்கள் எவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்றும், சிகிச்சையில் ஏதேனும் குறைகள் உள்ளதா என்றும் கேட்டறிந்தார். மேலும், நோயாளிகளுக்கு வழங்கப்படும் பால் மற்றும் பழங்களைச் சோதனை செய்து, தரமான பழங்களை வழங்குமாறு அங்குள்ள ஊழியர்களைக் கேட்டுக்கொண்டார்.

​தொடர்ந்து, த.வெ.க தலைவர், தமிழக முதல்வர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு அங்குள்ள உள்நோயாளிகளுக்கு பிஸ்கட் பாக்கெட்டுகளை வழங்கினார்.

இதையும் படிங்க: தொழிலாளர் கொள்கை எங்கே? ஆளுநர் உரையில் உழைப்பாளர்கள் புறக்கணிக்கப்பட்டதாக சிஐடியு அதிருப்தி!

​இந்த நிகழ்விற்குப் பிறகு கம்பம் சட்டமன்ற உறுப்பினர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: ​"கடந்த இரண்டு நாட்களாக எதிர்க்கட்சித் தொலைக்காட்சிகளில் என்னைப் பற்றி அவதூறுகளைப் பரப்பி வருகிறார்கள். நான் முல்லைப் பெரியாறு அணைக்கு எதிரானவன் கிடையாது. 30 ஆண்டுகளுக்கு மேலாக அரசியலில் இருக்கிறேன். முல்லைப் பெரியாறு அணையைப் பற்றியும், கம்பம் தொகுதியைப் பற்றியும் எனக்கு நன்றாகத் தெரியும். அதனால் நான் எந்தத் தவறும் கூறவில்லை.

முல்லைப் பெரியாறு அணையில்​விதிமுறைகளின்படி  (Rule Curve) 136 அடி வந்தவுடன் தண்ணீரை வீணாகக் கடலில் கலக்கிறீர்கள்; அந்தத் தண்ணீரை எங்களுக்குத் தாருங்கள் என்றுதான் நான் கூறினேன். 

ஆனால், அதைத் தவறாகச் சித்தரித்துச் செய்திகளை வெளியிட்டுள்ளனர். ​கேரளாவில் எனக்குச் சொத்துக்கள் உள்ளன. அந்தச் சொத்துக்கள் அனைத்தையும் கேரளா அரசே எடுத்துக் கொண்டு, முல்லைப் பெரியாறு அணையில் 152 அடி தண்ணீர் தேக்குவதற்கு நடவடிக்கை எடுக்கட்டும். சொத்துக்காக நான் எதற்கும் பயந்து பேசவில்லை. எனக்குத் தேவை மக்களின் நலன் மட்டுமே. அதற்காக முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் நான் எதை வேண்டுமானாலும் செய்வேன்," என்று அவர் கூறினார்.
 

இதையும் படிங்க: திமுக திட்டங்களை மறைத்தால் பதிலடி கொடுங்கள்! எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் உத்தரவு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share