×
 

அதிகாரிகளைத் தரமான நாற்காலியில்தான் அமர வைத்தேன் - தவெக எம்எல்ஏ கனிமொழி விளக்கம்!

நான் தப்பு பண்ணல, அதிகாரிகளைச் சமமாக நடத்தினேன் என்று சோசியல் மீடியா சர்ச்சைக்கு தவெக எம்எல்ஏ கனிமொழி விளக்கம் அளித்துள்ளார்.

தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றுத் தவெக சார்பில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி அவர்கள், அரசு அதிகாரிகளைத் தனது சொந்த ஜோதிட அலுவலகத்திற்கு வரவழைத்துப் பாகுபாடு காட்டியதாகச் சமூக வலைத்தளங்களில் எழுந்த கடுமையான புகார்களுக்குத் தற்போது அதிரடியாகத் தனது விளக்கத்தை முன்வைத்துள்ளார்.

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிட்டு அசுர வெற்றி பெற்ற எம்எல்ஏ கனிமொழி அவர்கள், அரசு அதிகாரிகளுடன் நடத்திய ஆலோசனைக் கூட்டம் தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகிப் பெரும் விவாதத்தைக் கிளப்பின. ஒரு மக்கள் பிரதிநிதியாக அரசு அதிகாரிகளைத் தனது ஜோதிடப் பார்க்கும் அலுவலகத்திற்கு வரவழைத்துப் பேசியதும், அங்கு அதிகாரிகளுக்குச் சமமான இடவசதி வழங்கப்படாமல் பாகுபாடு காட்டப்பட்டதாகவும் கோட்டை வட்டார அரசியல் களத்தில் எதிர்க்கட்சிகள் வசைபாடத் தொடங்கின. இந்த வினர் பூதாகரமாக வெடித்ததைத் தொடர்ந்து, தவெக எம்எல்ஏ கனிமொழி அவர்கள் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து இந்த சர்ச்சை குறித்து அக்குவேறு ஆணிவேறாக விளக்கியுள்ளார்.

செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய தவெக எம்எல்ஏ கனிமொழி, "எனது தொகுதியில் மக்கள் பணிகளைத் தொய்வின்றி உடனுக்குடன் டாப் கியரில் கொண்டு செல்ல வேண்டும் என்பதே எனது ஒரே நோக்கம். எனக்காக ஒதுக்கப்பட்டுள்ள புதிய எம்எல்ஏ (MLA Office) அலுவலகத்தில் தற்போது கட்டுமான மற்றும் சீரமைப்புப் பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அங்கு அமர்ந்து பேச முடியாத சூழல் நிலவியதால் தான், தொகுதிப் பிரச்சினைகள் குறித்துப் பேச அதிகாரிகளைத் தற்காலிகமாக எனது சொந்த ஜோதிட அலுவலகத்திற்கு வரவழைத்து அவசரமாகப் பேச வேண்டியதாயிற்று" என்று விளக்கினார்.

இதையும் படிங்க: திமுக - காங்கிரஸ் கூட்டணி முறிவு? நாடாளுமன்றத்தில் இருக்கை மாற்ற கோரி கனிமொழி கடிதம்!

மேலும், அதிகாரிகளைப் பாகுபாட்டுடன் நடத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை முற்றிலும் மறுத்த அவர், "அங்கு வந்திருந்த அனைத்து அரசு அதிகாரிகளையும் மிகவும் மரியாதையுடன், தரமான நாற்காலிகளில் (Chairs) அமர வைத்துத் தான் தொகுதிப் பணிகள் குறித்துப் பேசினேன். இதில் எந்தவொரு உள்நோக்கமோ அல்லது அதிகாரப் பாகுபாடோ சிறிதளவும் கிடையாது" என்று உருக்கமாகக் கூறி சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

 

 

 

இதையும் படிங்க: “தமிழக விவசாயிகளுக்கு தட்டுப்பாடின்றி உரம் வேண்டும்!” - பிரதமருக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் கடிதம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share