×
 

DMK, BJP கூட நிச்சயமாக கூட்டணி இல்லை.. தமிழக வெற்றிக் கழகம் திட்டவட்டம்..!

திமுக மற்றும் பாஜக தேர்தல் கூட்டணி கிடையாது என தமிழக வெற்றிக்கழகம் மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழக வெற்றி கழக பொதுச்செயலாளர் நிர்மல் குமார் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, திராவிட முன்னேற்றக் கழகத்துடனும் பாரதிய ஜனதா கட்சி உடனும் தேர்தல் கூட்டணி கிடையாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 

பாஜகவுடன் கூட்டணி இல்லை என விஜய் சொல்லவில்லையே தமிழக வெற்றி கழகத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லையே என்றும் யாரோ ஒருவர் கூறுவதற்கு பதில் அளிக்க முடியாது என்றும் தமிழிசை சௌந்தரராஜன் கூறி இருந்தார்.

இதையும் படிங்க: எம் தொப்புள் கொடி உறவுகளுக்கு..! முள்ளிவாய்க்கால் நினைவு தின வீரவணக்கம் செலுத்திய விஜய்..!

இந்த நிலையில், பாஜக திமுகவுடன் கூட்டணி இல்லை என தங்கள் தலைவர் விஜய் கூறியதில் எந்த மாற்றமும் இல்லை என தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் நிர்மல் குமார் கூறியுள்ளார். இந்தக் கேள்வியை மீண்டும் மீண்டும் கேட்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் முதலாம் ஆண்டு நிறைவு விழாவில் தங்கள் தலைவர் விஜய் கூறிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: பாஜகவோட கூட்டணி இல்லைன்னு விஜய் சொன்னாரா? பொடி வைத்துப் பேசிய தமிழிசை!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share