தவெக நிர்வாகி செய்த பகீர் காரியம்... ஸ்டன் ஆன சோழவந்தான்... காலை முதல் நீடிக்கும் பரபரப்பு...!
ஓட்டுநர் நடத்துனர் பாதுகாப்பினை உறுதி செய்யும் வரை பணி புறக்கணிப்பு போராட்டம் அறிவிப்பு
மதுரை சோழவந்தான்: தவெக நிர்வாகி அரசுப் பேருந்து ஓட்டுநரை கத்தியால் தாக்கிய விவகாரம் - 55 அரசு பேருந்துகளை இயக்காமல் ஓட்டுனர் நடத்துனர் என பணிமனை ஊழியர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்.
மதுரை சோழவந்தான் அருகே அரசுப் பேருந்து ஓட்டுநரை மது போதையில் இருந்த தவெக நிர்வாகி கத்தியால் தாக்கிய சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, அரசுப் பேருந்து ஊழியர்கள் திடீர் பணிப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து பயணிகளை ஏற்றி வந்த அரசுப் பேருந்து, கருப்பட்டியில் பயணிகளை இறக்கிவிட்டு சோழவந்தான் பணிமனைக்குத் திரும்பிக் கொண்டிருந்தது. அப்போது, சாலையின் குறுக்கே காரை நிறுத்தி வழிவிட மறுத்த தவெக நிர்வாகி தனுஷ்கோடிக்கும், ஓட்டுநர் பிரசாத்திற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த தனுஷ்கோடி, ஓட்டுநர் பிரசாத்தை கத்தியால் தலையில் தாக்கி மிரட்டல் விடுத்தார்.
இதையும் படிங்க: எந்த ஒரு தியாகமும் செய்யாமல்... தவெக பெயரைக்கூட சொல்லாமல் சகட்டுமேனிக்கு சாடிய ஆ.ராசா...!
இதில் பலத்த காயமடைந்த ஓட்டுநர் பிரசாத், மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்தக் கொடூரத் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தாக்குதலில் ஈடுபட்ட தனுஷ்கோடியை உடனடியாகக் கைது செய்ய வலியுறுத்தியும், சோழவந்தான் அரசுப் பணிமனையில் 300-க்கும் மேற்பட்ட ஓட்டுநர்கள், நடத்துநர்கள் மற்றும் பணிமனை ஊழியர்கள் இன்று காலை முதல் பணிப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தச் சம்பவத்தால் சோழவந்தான் பணிமனையைச் சேர்ந்த 55 அரசுப் பேருந்துகள் இயக்கப்படாமல் பேருந்து நிலையத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால், வழக்கமாகப் பணிக்குச் செல்வோர் என பொதுமக்கள் தங்களின் அன்றாடப் பயணங்களுக்குப் பேருந்து வசதி இன்றி கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள சோழவந்தான் சோழவந்தான் காவல்துறையினர், தலைமறைவாக உள்ள தனுஷ்கோடியைப் தேடி வருகின்றனர்.. ஏற்கனவே இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் கஞ்சா விற்பனை மற்றும் அடிதடி மற்றும் குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஓட்டுநர் மற்றும் நடத்துனர் உயிருக்கு பாதகப்பினை உறுதி செய்யும் வரை பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும்குற்றவாளியைக் கைது செய்யும் வரை போராட்டம் தொடரும் என ஓட்டுநர் சங்கத்தினர் அறிவித்துள்ளதால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது
இதையும் படிங்க: “ஒழுங்கா ஆட்சி நடத்துற வழியைப் பாருங்க...” - திரும்ப, திரும்ப திமுகவை சாடும் விஜய்க்கு கனிமொழி சுளீர் பதிலடி...!