அதிர்ச்சி சம்பவம்..! ஸ்ரீரங்கம் தவெக தேர்தல் அலுவலகம் தீ வைத்து எரிப்பு..!! மர்ம நபர்கள் வெறிச்செயல்..!
ஸ்ரீரங்கம் தொகுதி தமிழக வெற்றி கழகத்தின் தேர்தல் அலுவலகம் தீ வைத்து எரிக்கப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டம் திருவரங்கம் தொகுதி தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் ரமேஷின் தேர்தல் அலுவலகம் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக அவர் கூறுகையில், எனது தொகுதி தேர்தல் அலுவலகம் தீ வைத்து எரிக்கப்பட்டிருக்கிறது என்று தெரிவித்தார்.
பாதுகாப்பற்ற சூழலில் நடைபெற உள்ளதா திருவரங்கம் தொகுதி வாக்கு எண்ணிக்கை என்று கேள்வி எழுப்பினார். திருச்சி மாவட்டம், திருவரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அந்தநல்லூர் ஒன்றியம், பெட்டவாய்த்தலை பகுதியில் செயல்பட்டு வந்த தனது தேர்தல் அலுவலகம் ஒன்றை மர்ம நபர்கள் இன்று அதிகாலை தீயிட்டு கொளுத்தி முற்றிலும் அழித்துள்ளார்கள் என்றார்.
அத்துடன் அங்கு வைக்கப்பட்ட பதாகைகள் அனைத்தையும் கிழித்துள்ளனர் என்றும் கூறினார். இது தொடர்பாக தமிழக வெற்றிக் கழக ஒன்றிய செயலாளர் தலைமையில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. காவல் துறை உடனடியாக சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் யாராக இருந்தாலும் கைது செய்து தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்று கேட்டுள்ளார்.
இதையும் படிங்க: இது எலெக்ஷன் பெட்டிங்?! இளம் தலைமுறையினருக்கு குறி! இன்று பணம் கட்டினால் தேர்தல் முடிவு அறிவித்ததும் பணம்?!!
மேலும் தேர்தல் நாளன்று வாக்கு எண்ணும் மையத்தில் எனக்கும், எமது கழக நிர்வாகிகள், தோழர்களுக்கும் எதிராக வன்முறை செயல்களை அரங்கேற்ற எதிர் கட்சிகள் திட்டமிடுவதாக தகவல்கள் கிடைத்துள்ளது என்றும் தெரிவித்தார். உண்மையில் வாக்கு எண்ணிக்கை நேர்மையாக, பாதுகாப்பாக நடைபெறுமா என்ற சந்தேகமும், அச்சமும் எழுந்துள்ளது என்றும் தேர்தல் ஆணையம், உடனடியாக தலையிட்டு வாக்கு எண்ணும் மையத்தில் கூடுதல் பாதுகாப்பு எங்களுக்கு வழங்க வேண்டும் என்றும், வாக்கு எண்ணிக்கை நேர்மையாக நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதையும் படிங்க: உதய் அண்ணாவை பார்க்கக்கூட முடியலையே! புலம்பும் நிர்வாகிகள்! ஐவரணி ஆட்டம்! மு.க.ஸ்டாலினிடம் பறந்த புகார்!