×
 

"ஜெகத்ரட்சகன் மகன் முதல் ரவி மரியா வரை..! தவெகவுக்கு கூடும் மவுசு... பனையூருக்கு படையெடுக்கும் மாற்றுக் கட்சியினர்..!!

பல்வேறு மாற்றுக் கட்சியினர் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்து வருகின்றனர்.

தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு ஏற்பட்டுள்ள முக்கிய மாற்றங்களில் ஒன்று, அதிமுகவில் இருந்து பல முன்னாள் அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் தமிழக வெற்றி கழகத்தில் இணைவது. விஜய் தலைமையிலான தவெக, தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைத்த பிறகு, அதிமுகவின் பல்வேறு அடுக்குகளில் இருந்து தொடர்ச்சியான இணைப்புகள் நிகழ்ந்து வருகின்றன.

இது அதிமுகவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதுடன், தவெகவின் அமைப்பு ரீதியான விரிவாக்கத்தையும் வலுப்படுத்தியுள்ளது. இந்த இணைப்புகளின் தொடக்கம் தேர்தலுக்கு முந்தைய காலகட்டத்தில் இருந்தாலும், தவெக ஆட்சி அமைந்த பிறகு அது தீவிரமடைந்தது. இன்றும் தமிழக வெற்றி கழகத்தின் பனையூர் தலைமை அலுவலகத்தில் மாற்றுக் கட்சியினர் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அமைச்சர் ஆனந்த் முன்னிலையில் மாற்றுக் கட்சியினர் தமிழக வெற்றி கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர். முன்னாள் எம்எல்ஏக்கள் கீதா மணிவண்ணன், கே. பி கந்தன், விபி கலைராஜன், பாண்டியம்மாள், மணிவண்ணன் (கரூர்), அன்பழகன், ஜெயசீலன் உள்ளிட்டோர் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தனர். அதிமுக முன்னாள் நிர்வாகிகள் பலரும் அமைச்சர் ஆனந்த் முன்னிலையில் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்து இருக்கின்றனர்.

இதையும் படிங்க: C. விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் மீதான குட்கா முறைகேடு வழக்கு..! 3 மாசம் தான் டைம்..! நீதிமன்றம் கெடு..!

நேற்று அதிமுகவில் இருந்து விலகிய வைகைச் செல்வன் தமிழக வெற்றி கழகத்தில் இணைய உள்ளார். அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகிய வைகைச் செல்வன் தமிழக வெற்றி கழகத்தில் ஐக்கியம் ஆகுகிறார். நடிகர் ரவி மரியா தமிழக வெற்றி கழகத்தின் இணைந்தார். முன்னாள் எம்பிக்கள் பிரபாகரன், பார்த்திபனும் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்து இருக்கின்றனர். மேலும் திமுக எம்பி ஜெகத்ரட்சகன் மகனும் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார். 

இதையும் படிங்க: அரசியல் களமே ஆடிப்போச்சு...!! - துணை முதலமைச்சர் திருமா... தவெகவுக்கு புது குடைச்சல்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share