×
 

உச்சக்கட்ட அட்டூழியம்... போலீஸ் கையை உடைத்த தவெகவினர் கைது... தட்டிக்கேட்டது தப்பா?

தவெகவினரை தட்டி கேட்ட காவலரை தாக்கி கையை உடைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

கும்பகோணத்தில் சாலையின் குறுக்கே பிளக்ஸ் பேனர்களை வைத்து அட்டகாசம் செய்த தவெகவினரை தட்டி கேட்ட காவலரை தாக்கி கையை உடைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  இந்த தாக்குதலில் ஈடுபட்ட தவெகவினர் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

 கும்பகோணம் நால் ரோடு அருகே நேற்று முன்தினம் இரவு, சாலையில் வாகனங்கள் செல்ல முடியாத வகையில், பேனர்களை குறுக்கே வைத்து தவெகவினர் அட்டகாசம் செய்துள்ளனர். அப்போது அந்த வழியாக ரோந்து சென்ற காவலர் தேவேந்திரன், அவர்களை கண்டித்து சாலையின் குறுக்கே வைத்திருந்த பேனரை அகற்ற கூறியுள்ளார். அப்போது தவெக வார்டு உறுப்பினர்களான அருண் (21), காளி (30) இருவரும் தேவேந்திரனை தாக்கியதில், அவருடைய வலது கையின் மணிக்கட்டு பகுதியில் எலும்பு முறிந்தது.

இதுகுறித்து கும்பகோணம் மேற்கு போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில், அருண், காளி இருவரும் அங்கிருந்து தப்பி சென்றனர்.  பின்னர்,  சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் காயம் அடைந்த தேவேந்திரனை கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். 

இதையும் படிங்க: டாஸ்மாக்கில் கூடுதலாக ரூ.10 வசூலிப்பு!! கண்காணிக்கும் உளவுத்துறை போலீசார்! சைலண்டாக பறந்த உத்தரவு!

தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.இது தொடர்பாக கும்பகோணம் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் சிவகுமார் வழக்கு பதிவு செய்து, குற்றவாளிகள் இருவரையும் தேடிவந்தனர். இதையடுத்து தலைமறைவாக இருந்த காளியை கைது செய்த நிலையில், மற்றொரு குற்றவாளி அருண் கும்பகோணம் நீதிமன்றத்தில் சரணடைந்தார். 

இதையடுத்து இருவரையும் கைது செய்த கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கும்பகோணத்தில்  காவலரின் கையை தவெகவினர் உடைத்த சம்பவம் மற்ற காவலர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்

இதையும் படிங்க: கோவையை டோட்டலாக கண்ட்ரோலில் எடுத்த காவல்துறை... 3,000 சதுர அடி பரப்பளவில் திறக்கப்பட்ட பிரம்மாண்டம்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share