×
 

அநியாயம் நடக்குது தளபதி… கட்சியை விட்டே நீக்கிட்டாங்க… போராட்டத்தில் குதித்த தவெக தொண்டர்கள்…!

ஆதவ் அர்ஜுனா புகைப்படத்தை பயன்படுத்தியதற்காக கட்சியில் இருந்து நீக்கி உள்ளதாக தமிழக வெற்றி கழகத்தினர் போராட்டத்தில் குதித்தனர்.

தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சி 2024 பிப்ரவரி மாதம் நடிகர் விஜயால் தொடங்கப்பட்டது. இது தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் வேகமாக வளர்ந்து வரும் ஒரு புதிய சக்தியாக உருவெடுத்துள்ளது. கட்சி தொடங்கிய சில மாதங்களிலேயே மாவட்ட அளவில் அமைப்புகளை வலுப்படுத்தியது, உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்தியது. விஜயின் ரசிகர் மன்றங்கள் பெருமளவில் கட்சியின் அடித்தளமாக மாறின. இதனால் இளைஞர்கள் மத்தியில் பெரும் ஆதரவு கிடைத்தது. 2024 அக்டோபரில் நடந்த முதல் மாநில மாநாடு பெரும் கூட்டத்தை ஈர்த்தது. அங்கு கட்சியின் கொடி, கொள்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. 

பெரியார், அம்பேத்கர் போன்றவர்களை சித்தாந்த வழிகாட்டிகளாக அறிவித்தது. ஊழல், பாசிசம் போன்றவற்றை எதிர்க்கும் நிலைப்பாடு எடுத்தது. 2025ல் இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் நடந்தது. அது தமிழ்நாடு அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. கட்சி தனித்து போட்டியிடும் என்ற அறிவிப்பு, 2026 சட்டமன்றத் தேர்தலில் மாற்று சக்தியாக உருவாக்கியது.

இளைஞர்கள், அதிருப்தி அடைந்த வாக்காளர்கள் இதன்பால் ஈர்க்கப்பட்டனர். பாரம்பரிய கட்சிகளான திமுக, அதிமுகவுக்கு போட்டியாக உருவெடுத்தது.இருப்பினும், இந்த வளர்ச்சியின் இடையே சில குற்றச்சாட்டுகளும் எழுந்தன. குறிப்பாக, கட்சி பொறுப்புகளை பணம் பெற்றுக்கொண்டு வழங்குவதாக குற்றச்சாட்டுகள் வந்தன. 

இதையும் படிங்க: #BREAKING: இனி சரவெடி தான்… ஈரோட்டில் விஜய் மக்கள் சந்திப்புக்கு அனுமதி… தவெகவினர் செம்ம குஷி…!

இந்த நிலையில், பனையூர் தவெக தலைமை அலுவலகம் உள்ளேயே போராட்டம் தொண்டர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். ஆதவ் அர்ஜுனாவின் புகைப்படத்தை பேனரில் பயன்படுத்தியதற்காக வட்டச் செயலாளரை கட்சியில் இருந்து நீக்கியதாக திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளர் மீது குற்றம் சாட்டியுள்ளனர். கட்சியில் பதவி தருவதாக பலரிடம் பணம் வாங்கி ஏமாற்றியுள்ளதாகவும் அவர்கள் கோஷம் எழுப்பினர்.

இதையும் படிங்க: எழுதி வச்சுக்கோங்க… விஜய் தலைமையில் தான் ஆட்சி… எட்டாவது அதிசயம் இது… தவெக அருண்ராஜ் உறுதி…!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share