சாதிவாரி கணக்கெடுப்பு..! தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம்... தவெகவினர் கண்டன முழக்கம்..!!
தமிழகம் முழுவதும் தவெக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் இன்று தமிழ்நாடு முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வழிகாட்டுதலின் கீழ், கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்டோர் சார்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பே இந்த போராட்டம் அறிவிக்கப்பட்டது.
மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஒரே நேரத்தில் ஒருங்கிணைக்கப்பட்ட இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் என பெருந்திரளானோர் பங்கேற்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் முக்கிய நோக்கம் தற்போதைய தமிழக அரசின் சில முக்கிய தோல்விகள் மற்றும் தவறுகளை கண்டிப்பதாகும். குறிப்பாக, தமிழகத்தில் உடனடியாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி, சமூக நீதியை உறுதி செய்ய வேண்டும் என்பது முதன்மையான கோரிக்கையாக உள்ளது.
அரசு இதற்கான அரசாணையை வெளியிட தவறியதை கடுமையாக கண்டிக்கிறது த.வெ.க.அடுத்ததாக, தமிழகத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு சீர்கேடுக்கு முடிவு கட்ட வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தப்படுகிறது. கடந்த காலங்களில் நடந்த பல்வேறு குற்றச் சம்பவங்கள், பெண்கள் மீதான வன்முறைகள், கொலைகள் உள்ளிட்டவை தொடர்பாக அரசின் பொறுப்பின்மையை சுட்டிக்காட்டி ஆர்ப்பாட்டத்தில் குரல்கள் எழுப்பப்படுகின்றன.
இதையும் படிங்க: பாலியல் குற்றம் தான் "டெய்லி ஹெட் லைன்"... இதுதான் உங்க "நம்பர் ஒன்" சாதனையா சிஎம் சார்? கொந்தளித்த அருண்ராஜ்..!!
மேலும், போதைப்பொருள் புழக்கத்தை தடுப்பதில் அரசு முழுமையாக தோல்வியடைந்துள்ளது என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது. போதை பழக்கத்தால் இளைஞர்கள் அழிவதை தடுக்க தவறியதால், இது சமூக அழிவுக்கு வழிவகுக்கிறது என த.வெ.க தரப்பில் விமர்சிக்கப்படுகிறது.இவை தவிர, அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்கள், மக்கள் சந்திப்புகளுக்கு விதிக்கப்பட்டுள்ள சில கட்டுப்பாடுகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையும் இடம்பெற்றுள்ளது.
இதையும் படிங்க: தினந்தினம் பெரும் கொடுமை... நெஞ்சு பதறுது... கல்லாப்பெட்டி கூட்டணி தான் முக்கியமா? பந்தாடிய விஜய்..!!