தவெக போராட்டத்தின் போது முண்டியடித்த தொண்டர்கள்.. பொது சொத்துக்கள் சேதாரம் குறித்து ஆய்வு..!
தமிழக வெற்றிக் கழகத்தின் போராட்டத்தின் போது நடந்த பொது சொத்துக்கள் சேதம் தொடர்பாக அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.
மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளி அஜித் குமார் என்பவர், நிகிதா என்ற பெண் கொடுத்த நகை திருட்டு புகார் தொடர்பாக விசாரணை நடத்த அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது காவலர்கள் தாக்கியதில் பலத்த காயமடைந்த அஜித்குமார் மரணமடைந்தார். அவரது உயிரிழப்புக்கு நீதி கேட்டு தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர். சாரி வேண்டாம் நீதி வேண்டும் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
விஜயை காண்பதற்காக காலை முதலே சிவானந்தா சாலையில் ஏராளமான தொண்டர்கள் குவிந்தனர். போராட்டத்திற்கு விஜய் வருகை தந்த போது அவரை காண்பதற்காக முண்டியடித்ததாக தெரிகிறது. அப்போது சாலையின் நடுவே இருந்த தடுப்புகளையும் கம்பிகளையும் அவர்கள் சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. மேலும் விஜய காணும் ஆர்வத்தில் சாலையின் நடுவில் இருந்த செடிகளையும் நாசமாக்கியதாக கூறப்படுகிறது.
மேலும் பேரி கார்டுகளையும் அவர்கள் சேதப்படுத்தியதாக சொல்லப்படுகிறது. போராட்டம் முடிந்த பிறகு சிவானந்த சாலையை ஒரு குலைந்தவாறு காணப்பட்டது. போராட்டத்திற்கு வருகை தந்தவர்கள் இதுபோல நடந்து கொள்வதற்கு பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இந்த நிலையில், மூன்று துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் சிவானந்தா சாலையில் பொது சொத்துக்கள் சேதாரம் தொடர்பாக ஆய்வு நடத்தினர்.
சேதத்திற்கு உரிய நஷ்ட ஈடு தமிழக வெற்றிக்கழகத்தில் இருந்து வசூலிக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். பொது சொத்துக்கள் சேதம் தொடர்பாக விஜய்க்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் மாநகராட்சி அதிகாரிகள் கூறியுள்ளனர். என்னென்ன பாதிப்புகள் ஏற்பட்டிருக்கிறது, எவ்வளவு பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என ஆய்வு செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: முதல்வர் பதவி விலகியே ஆகணும்.. மேடையில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன அருண்ராஜ்..!
இதையும் படிங்க: லாக்கப் மரணமடைந்த 24 பேர் குடும்பத்துக்கு கிட்ட சாரி கேட்காதது ஏன்? விஜய் சரமாரி கேள்வி..!