பொண்டாட்டியவே காப்பாத்தல... மக்களை காப்பாற்றுவாரா? தவெக ரஞ்சனா கடும் தாக்கு..!!
தவெக தலைவர் விஜய் குறித்து ரஞ்சனா கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் மகளிர் தின கொண்டாட்டம் நேற்று முன்தினம் அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் நடைபெற்றது. அப்போது மகளிருக்கான பல்வேறு சிறப்பு திட்டங்களை வெளியிட்ட விஜய், தனது தனிப்பட்ட வாழ்க்கையில் எழுந்துள்ள பிரச்சனை குறித்தும் பேசினார். அதைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். நான் பார்த்துக்கொள்கிறேன்.
அது worth ஏ இல்லை.. தேவையின்றி நீங்க கஷ்டப்படாதீங்க.. நீங்க கஷ்டப்படுறத பார்த்தா எனக்கு கஷ்டமாக இருக்கிறது" என்று கூறினார். இந்த சூழலில் சமீபத்தில் பாஜகவிலிருந்து விலகி தமிழக வெற்றி கழகத்தில் இணைந்த ரஞ்சனா நாச்சியார் கெருக்கம்பாகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். தனிமனித ஒழுக்கம் இல்லாத தலைவன் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் என்று கூறினார்.
மனைவியை காப்பாற்றாத தலைவன் தொண்டர்களை எப்படி காப்பாற்றுவார் என்றும் தமிழக வெற்றி கழகத்தின் கொள்கை தலைவர்களாக உள்ள வேலுநாச்சியார், அஞ்சலை அம்மாள் உள்ளிட்டோர்களின் கொள்கைப்படி விஜய் நடக்கவில்லை என்றும் கூறியுள்ளார். மேடை ஏறி பெண்ணியம் பேசும் விஜய்க்கு கண்ணியம் இல்லை என்றும் விஜயை பின்பற்றக்கூடிய இளைஞர்கள் தவறாக போக விஜய் வழிவகை செய்வதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பெண்ணியம் பேசும் விஜயிடம் கண்ணியம் இருக்கா? - கட்சிக்குள் இருந்தே விஜய்க்கு வந்த ஸ்ட்ராங் வார்னிங்...!
சமுதாயத்தில் விவாகரத்து நடப்பது பெருகிக்கொண்டே போகக்கூடிய நிலையில் தமிழக வெற்றி கழக தலைவருக்கு ஆதரவு தெரிவிப்பது கலாச்சார சீர்கேடு என்றும் மேடை ஏறி பெண்ணியம் பேசி கண்ணியம் இல்லாமல் திரிஷாவை கல்யாணத்திற்கு அழைத்து வருகிறார் என்றும் இதனை சமுதாயம் விஜயை எப்படி பார்க்கும் என கேள்வி எழுப்பிய அவர், மாற்றம் கொடுக்கக் கூடிய விஜய் இப்படி மாற்றம் ஏற்படுத்துவாரா என்பது சாத்தியமாக உள்ளது என கேட்டார். மனைவியே காப்பாற்றவில்லை என்றால் என் தலைவன் என்னை எப்படி காப்பாற்றுவார் என்றார்.
இதையும் படிங்க: “வெத்து வேட்டு”... விஜய் தேர்தல் அறிக்கையை கிழித்து தொங்கவிட்ட அமைச்சர் கீதா ஜீவன்...!