விஜய் தான் முதல்வர் வேட்பாளர்... கூட்டணிக்கு வாங்க... செங்கோட்டையன் அழைப்பு...!
விஜயை முதல்வர் வேட்பாளராக இருப்பவர்கள் கூட்டணிக்கு வாருங்கள் என செங்கோட்டையன் அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழக அரசியலில் புதிய அலை என்று அழைக்கப்படும் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கி தீவிரமாக களமாடி வருகிறார். இளைஞர்கள் பட்டாளம் விஜயின் அரசியலுக்கு பெரும் ஆதரவு கரங்களாக இருக்கின்றனர். ஏதாவது மாற்றம் வராதா என்று எதிர்பார்ப்பவர்களுக்கு விஜய் ஒரு மாற்றமாக அமைவார் என்று கூறப்படுகிறது.
த.வெ.க, 2024 பிப்ரவரியில் விஜய் தொடங்கிய கட்சி. ஊழல், சாதி-மத பிளவுகளை எதிர்த்து, சமூக நீதி, முன்னேற்றம் என்பவற்றை மையமாகக் கொண்டு செயல்படுவதாக அறிவித்தது. 2024 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடாமல், 2026 சட்டமன்றத் தேர்தலில் தனித்து நிற்கும் என அறிவித்தது. இதற்கிடையில், கட்சியின் மாநாடுகள், உறுப்பினர் சேர்க்கை இயக்கங்கள் ஆகியவை மக்களிடையே வரவேற்பைப் பெற்றன.
அடுத்த ஆண்டு நடக்கும் சட்டமன்றத் தேர்தலை மையமாகக் கொண்டு தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தனது தேர்தல் சுற்றுப்பயணத்தை உற்சாகத்துடன் தொடங்கி நடத்தி வந்தார். அலைக்கடலென மக்கள் கூட்டம் திரண்டு விஜய்க்கு பேராதரவு கொடுத்தனர். கரூர் சம்பவம் தமிழக வெற்றி கழகத்தை இந்த நிகழ்வு முடக்கிய நிலையில் தற்போது மீண்டு வருகிறது. சமீபத்தில் விஜய் புதுச்சேரியில் மக்கள் சந்திப்பு கூட்டம் நடத்தினார். இந்த நிலையில் ஈரோட்டில் அவர் பரப்புரை மேற்கொள்கிறார்.
இதையும் படிங்க: புஸ்ஸான புஸ்ஸி ஆனந்த்... தவெகவில் ஓங்கும் செங்கோட்டையன் கை... முக்கிய பொறுப்பை தூக்கிக் கொடுத்த விஜய்...!
ஈரோட்டில் டிசம்பர் 18ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மேற்கொள்ளும் பரப்புரை குறித்து செங்கோட்டையன் விளக்கம் அளித்தார். பெருந்துறை அடுத்த விஜயமங்கலம் அருகே சரளை பகுதியில் காலை 11:00 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்தார். விஜய்யை முதல்வர் வேட்பாளராக இருப்பவர்கள் தமிழக வெற்றி கழகத்தின் கூட்டணிக்கு வரலாம் என செங்கோட்டையன் அழைப்பு விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: விஜய் தலைமையை ஏற்றால் தான் கூட்டணி… தவெக மா.செ. கூட்டத்தில் முக்கிய தீர்மானம்…!