முதல் முறையாக விசில் சின்னத்தில் போட்டி...சொந்த ஊரில் பிரசாரத்தை தொடங்கிய செங்கோட்டையன்...!!
வீடு, வீடாக சென்று வாக்கு சேகரித்த செங்கோட்டையனை அப்பகுதி பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.
தமிழகத்தில் 234 தொகுதிகளுக்குமான சட்டமன்றத் தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 23 ஆம் தேதி நடக்கவிருக்கிறது. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 30ம் தேதி தொடங்கி ஏப்ரல் 6 வரை நடக்கிறது. தவெக தலைவர் விஜய் வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் சென்னை பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார்.
பெரம்பூரில் முதல் நாளே தவெக தலைவர் விஜய் வேட்புமனுவை தாக்கல் செய்தார். அதனைத் தொடர்ந்து பெரம்பூர் விவேகானந்தர் சாலை, கொளத்தூர், வில்லிவாக்கம் என மூன்று தொகுதிகளில் பிரசாரத்திலும் ஈடுபட்டார். அதேபோல் நேற்று திருச்சி கிழக்கில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்த விஜய், அங்கிருந்து திறந்த வேனில் நின்றபடியே பரப்புரையில் ஈடுபட்டார்.
நேற்று ஏராளமான தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்கள் தமிழக முழுவதும் உள்ள தொகுதிகலில் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். அதன் தொடர்ச்சியாக பிரசாரத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கோபி தொகுதியில் போட்டியிடும் செங்கோட்டையன் தனது சொந்த ஊரான குள்ளம்பாளையத்தில் இருந்து பரப்புரையைத் தொடங்கியுள்ளார். அங்குள்ள சேலத்து மாரியம்மன் கோயிலில் வழிபாடு நடத்திய செங்கோட்டையன் பரப்புரையத் தொடங்கினார். வீடு, வீடாக சென்று வாக்கு சேகரித்த செங்கோட்டையனை அப்பகுதி பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.
இதையும் படிங்க: தேர்தல் வேட்டை: மைத்துனர் வீட்டில் பணத்தை பதுக்கிய தவெக வேட்பாளர்... கட்டுக்கட்டாய் சிக்கியது ரூ.50 லட்சம்...!
கோபிசெட்டிப்பாளையம் தொகுதியில் 9-ஆவது முறையாக போட்டியிடும் தமிழக முன்னாள் அமைச்சரும் அரசியலில் எம்ஜிஆர் காலத்திருந்தே களம் கண்டு வரும் மூத்த தலைவருமான கே. ஏ. செங்கோட்டையன் இம்முறை தமிழக வெற்றிக் கழகம் கட்சி வேட்பாளராக களமிறங்குகிறார். அவர் அத்தொகுதியில் விசில் சின்னத்தில் போட்டியிடுகிறார்.
இந்நிலையில், தமிழக தேர்தல் வரலாற்றில் ஒரே தொகுதியில் 8 முறை போட்டியிட்டு வெற்றி பெற்ற செங்கோட்டையன் இரட்டை இலை சின்னத்திலிருந்து விசில் சின்னத்துக்கு மாறி போட்டியிடுவது அவருக்குச் சாதகமா பாதகமா என்பதற்கான பதில் வாக்கு எண்ணிக்கை நாளான மே. 4-இல் தெரிய வரும்.
இதையும் படிங்க: அடுத்த மே எங்க ஆட்சி தான்... அடித்துச் சொன்ன சி.டி.ஆர். நிர்மல்குமார்... அரசு அதிகாரிகளுக்கு பகிரங்க எச்சரிக்கை...!