×
 

சட்டைப்பையில் ஜெயலலிதா படம்... விஜய் சொன்ன அந்த வார்த்தை... மனவேதனையில் செங்கோட்டையன்...!!

தற்போது யார் படத்தை அகற்றிவிட்டு, யார் படைத்த வைத்துள்ளார் என ஓ. பன்னீர்செல்வம் மீது

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் உள்ள தனியார் மண்டபத்தில் பவானிசாகர் சட்டமன்றத் தொகுதி தமிழக வெற்றி கழக வீரர் வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும் த.வெ.க தலைமை ஒருங்கிணைப்பு குழு தலைவர்  கே.ஏ. செங்கோட்டையன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அவர் பேசுகையில், நான் தமிழக வெற்றி கழகத்தில் சேர்ந்த போது, ஜெயலலிதா, எம்ஜிஆர் படத்தை வைத்திருந்தேன்.

இதை பார்த்த தமிழக வெற்றி கழகத் தலைவர், தயவு செய்து அவர்கள் படத்தை நீங்கள் வைத்துக் கொள்ளுங்கள், இதை நான் பெருமையாக கருதி கொள்கிறேன் என்று பெருந்தன்மையோடு சொன்ன ஒரு பெருந்தலைவர் தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய். ஆனால் மூன்று முறை முதலமைச்சராக இருந்த அதிமுகவை சேர்ந்தவர், திமுகவில் இணைந்து, தற்போது ஜெயலலிதா, எம்ஜிஆர், படத்தை அகற்றிவிட்டு, திமுக தலைவர் படத்தை வைத்துள்ளார் என சுட்டிக்காட்டி பேசினார். 

செய்தியாளர் சந்திப்பின் போது, மதுரையில் நடைபெற்ற  விழாவில் பாரத பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்ட போது, அங்கு பெரியார் படத்தை அகற்றி விட்டனர். பெரியார் கொள்கையை கொண்டவர்கள் நாம்.  தமிழக அரசு தான் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறினார்.

இதையும் படிங்க: விஜய்க்கு செம்ம ஷாக்... செங்கோட்டையனின் திடீர் மனமாற்றம்... தவெகவிற்கு அடுத்தடுத்து அடி...!!

மூன்று முறை முதலமைச்சராக இருந்தவர் ஓ பன்னீர்செல்வம். அம்மா மீது அவர்கள் தான் வழக்கு போட்டார்கள். அதை அவர் சிந்தித்துப் பார்த்திருக்க வேண்டும். மூன்று முறை முதலமைச்சராக இருந்த அவர் நாம் என்ன செய்யப் போகிறோம், என்ன செய்ய வேண்டும், என்ன செய்யப் போகிறோம் என்று தெரிந்திருக்க வேண்டும். இதுதான் என்னுடைய வேண்டுகோள் .... வேற எந்த கருத்தும் என்னால் கூற முடியாது அது சரியாக இருக்காது...யார் எந்த கட்சிக்கு வேண்டுமாணாலும் போகலாம். அவரவர் தனிப்பட்ட சொந்த விருப்பம். மூன்று முறை முதலமைச்சராக இருந்த அவர் அம்மா மீது வழக்கு தொடர்ந்த அந்த இயக்கத்தில் போய் இணைந்தது வேதனைக்குரியது.

இதையும் படிங்க: தன்னை அர்ப்பணித்து தவவாழ்வு.. இதய தெய்வம் அம்மா..!! ஜெ. திருவுருவப்படத்துக்கு செங்கோட்டையன் மரியாதை..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share