×
 

#BREAKING: செங்கோட்டையன் ராஜினாமா... தவெகவில் ஐக்கியம்? பரபரக்கும் அரசியல் களம்...!

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.

கடந்த சில மாதங்களாகவே அதிமுகவில் பல குழப்பங்கள் நிகழ்ந்து வருகிறது. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கும் இடையே பல்வேறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு வருகிறது. எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சிகளில் செங்கோட்டையன் பங்கேற்காமல் இருந்தது அதேபோல் எடப்பாடி பழனிசாமி என் பெயரை கூட சொல்லாமல் இருந்ததும் அதிமுகவினர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது. 

இந்த நிகழ்வு அரசியல் வட்டாரத்தில் பெரும் தேச பொருளாக மாறிய நிலையில், சட்டசபையிலும் இருவருக்கும் இடையே சமூக நிலை ஏற்படவில்லை. செங்கோட்டையன் ஏன் பேசவில்லை என்பதை அவரிடமே கேளுங்கள் என்று எடப்பாடி பழனிச்சாமி கூறி இருந்தது இருவருக்கும் இடையே மோதல் போக்கு நிலவு வருவதை உறுதி செய்வதாகவே தெரிந்தது.

அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும் என்ற கருத்தை முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறி வந்தார். தலைமைக்கு அவர் கெடு விதித்த நிலையில் அவரது கட்சி பொறுப்புகள் பறிக்கப்பட்டன. இதற்கிடையில் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு பசும்பொன்னில் மரியாதை செலுத்துவதற்காக ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோருடன் சென்ற நிலையில், சசிகலாவையும் செங்கோட்டையன் சந்தித்து பேசினார். இதனால் ஆத்திரமடைந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செங்கோட்டையனை கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கினார். 

இதையும் படிங்க: 15 நிமிடத்தில் என்ன ஆச்சு? - புறப்பட்ட வேகத்திலேயே மீண்டும் வீடு திரும்பிய செங்கோட்டையன்...!  

ஆனால் தொடர்ந்து அதிமுகவை ஒருங்கிணைப்பு முயற்சி தொடரும் எனது செங்கோட்டையன் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தனது எம்எல்ஏ பதவியை செங்கோட்டை என் ராஜினாமா செய்துள்ளார். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்வதாக சபாநாயகர் அப்பாவுவிடம் வழங்கினார். செங்கோட்டையன் நாளை தமிழக வெற்றி கழகத்தின் இணையுள்ளதாக கூறப்படும் நிலையில் இன்று தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளார். எங்கே செல்வார் எம்ஜிஆர் விசுவாசி என்ற கேள்விகள் தற்போது முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இதையும் படிங்க: செல்போனில் சீக்ரெட் ஆலோசனை... இன்று இரவோடு இரவாக செங்கோட்டையன் செய்யப்போகும் தரமான சம்பவம்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share