×
 

விறுவிறு SIR… களத்தில் தவெக… அதுக்கு 16 பேர் கொண்ட குழு வெச்சு இருக்காங்களாம்…!

வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக மக்களுக்கு உதவ தவெக சார்பில் சட்டமன்ற தொகுதிவாரியாக 16 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி என்பது மிகவும் முக்கியமான ஒன்று. இறந்தவர்கள், மாற்று இடத்திற்கு சென்றவர்கள், புதியவர்கள் என பல்வேறு விஷயங்களை கருத்தில் கொண்டு பெயர் திருத்தம், முகவரி மாற்றம் என திருத்தப் பணிகள் நடைபெறுவது வழக்கம். 

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியை தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் எதிர்கின்றன. காரணம் தேர்தல் ஆணையம் பாஜக அரசுக்கு துணையாக செயல்படுவதாகவும் வாக்காளர் திருத்த பணிகள் மூலம் பொதுமக்களின் வாக்குரிமை பறிக்கப்படும் என்ற குற்றம் சாட்டி வருகின்றனர். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி இரண்டாம் கட்டமாக 12 மாநிலங்களில் நடத்தப்பட உள்ளதாக தலைமை தேர்தல் ஆணையர் தெரிவித்தார். தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் நடைபெற்று வருகிறது.

எஸ் ஐ ஆர் படிவங்கள் நிரப்புவதில் பல்வேறு சந்தேகங்கள் மக்களுக்கு எழுந்துள்ளது. என்னென்ன நிரப்ப வேண்டும், எப்படி நிரப்ப வேண்டும் உள்ளிட்டவை தொடர்பாக பல்வேறு குழப்பங்கள் நிலவி வருகின்றன. எஸ் ஐ ஆர் படிவத்தில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்ட வருகிறது. போதுமான விளக்கம் கொடுக்கப்படாததால் படிவங்கள் நிரப்புவதில் மக்கள் சிரமத்தை சந்திக்கின்றனர். இதன் காரணமாக சென்னையில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் S.I.R உதவி மையங்கள் செயல்படத் தொடங்கியுள்ளன.

இதையும் படிங்க: அதிரும் அரசியல் களம்... காங்கிரஸில் இணைய முடிவெடுத்த விஜய்... சீக்ரெட் மீட்டிங் உண்மையை போட்டுடைத்த ஜோதிமணி...!

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி நடந்து வரும் நிலையில், SIR தொடர்பான வழிகாட்டுதல்களை தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகளுக்கு மாநிலச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜூனா வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக மக்களுக்கு உதவ சட்டமன்ற தொகுதிவாரியாக 16 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. கட்சி நிர்வாகிகள் முறையாக பணியாற்றவில்லை எனில் புகார் அளிக்க உதவி எண்கள் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 

இதையும் படிங்க: தமிழக அரசியல் வரலாற்றில் முதல்முறை.. தவெக நிர்வாகிகளுக்கு QR குறியீடு அடையாள அட்டை..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share