×
 

#BREAKING: பொய் சொல்லி ஆட்சிக்கு வந்த திமுகவை கேள்வி கேட்காமல் இருக்க முடியுமா? காஞ்சிபுரத்தில் விஜய் தெறி பேச்சு…!

காஞ்சிபுரத்தில் நடைபெறும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் உரையாற்றினார்.

கரூர் நகரின் வேலுசாமிபுரத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் சுற்றுப்பயணம் பெரும் கூட்டத்தை ஈர்த்தது. ஆனால், இந்த ஆர்வமே துயரத்தின் விதையாக மாறியது. விஜய் மேடையில் பேசத் தொடங்கியதும், கூட்ட நெரிசல் கட்டுக்கடங்காமல் வெடித்தது. விஜயின் சுற்றுப் பயணத்தின் போது, கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர்.

சம்பவம் நடந்த உடனேயே, விஜய் சென்னைக்கு தனி விமானத்தில் திரும்பினார். அது ஒரு தவறான முடிவாகத் தோன்றியது. பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திக்காமல், போலீஸ் அனுமதி கோராமல் விலகியது அவருக்கு எதிராக கடும் விமர்சனங்களைத் தூண்டியது. விஜய் ஏன் கரூருக்கு வரவில்லை என்ற கேள்வி சமூக வலைதளங்களில், ஊடகங்களில் பரவியது. விஜய் விரைவில் கரூருக்கு செல்வார் என்று கூறப்பட்டது. அதற்காக காவல்துறை அனுமதி கேட்டு கடிதமும் கொடுக்கப்பட்டது.

தொடர்ந்து கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை சென்னைக்கு அழைத்து வந்து விஜய் ஆறுதல் தெரிவித்தார். கரூர் சம்பவத்தை தொடர்ந்து தமிழக வெற்றி கழகம் முடங்கியது. பிறகு கட்சிப் பணிகளை மெல்ல தொடங்கினார் விஜய். இந்த நிலையில் மீண்டும் தனது மக்கள் சந்திப்பு பயணத்தை தொடர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சேலத்தில் இருந்து தனது மக்கள் சுற்றுப்பயணத்தை விஜய் தொடங்க இருப்பதாகவும் அதற்காக பாதுகாப்பு கேட்டு மனு கொடுக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்பட்டது. 

இதையும் படிங்க: நான் வரேன்..! நீலாங்கரையிலிருந்து காஞ்சிபுரத்துக்கு பறந்த விஜய்... புதுப்பொலிவுடன் மீண்டும் மக்கள் சந்திப்பு...!

இந்த நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம் குன்னத்தில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் விஜய் உரையாற்றினார். நாட்டுக்காக உழைப்பதற்கு அண்ணா பிறந்தார் என்று பொது நலத்தில் தானே கண்ணாக இருந்தார் என எம்ஜிஆர் பாடியிருக்கிறார் எனவும் தெரிவித்தார்.அறிஞர் அண்ணா ஆரம்பித்த கட்சியை பிறகு கைப்பற்றியவர்கள் என்னெல்லாம் செய்துள்ளார்கள் என்பதை நான் சொல்லி தான் தெரிய வேண்டுமா என என்று கேட்டார்.

மக்களைப் பொய் சொல்லி ஏமாற்றி ஆட்சிக்கு வந்து திமுகவை எப்படி கேள்வி கேட்காமல் இருக்க முடியும் என்று கேள்வி எழுப்பினார். தனிப்பட்ட முறையில் எந்த வன்மமும் கிடையாது என்று விஜய் கூறினார். பெரிய மனவேதனைக்கு பிறகு மக்கள் சந்திப்பு நடந்து கொண்டிருப்பது பேரறிஞர் அண்ணா பிறந்த மண்ணில் தான் என்று கூறி உள்ளார். மக்களிடம் செல் என்ற அண்ணாவின் வார்த்தைகளை பின்பற்றுவதாகவும் ஆனால் அண்ணாவின் பெயர் தாங்கிய கட்சியினர் என்ன செய்கிறார்கள் என்றும் கேட்டார். 

இதையும் படிங்க: நாளை காஞ்சிபுரத்தில் களமிறங்கும் விஜய்... வீடு, வீடாக சென்று புஸ்ஸி ஆனந்த் செய்த காரியம்...! 

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share