×
 

TVK Vs NTK: “டுபாக்கூர் பொலிடிசியன்” - சீமானை பங்கமாய் கலாய்த்த தவெக தலைமை பேச்சாளர்....!

டுபாக்கூர் பொலிடிசியன் இன் இந்தியா என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை கலாய்த்த தமிழக வெற்றி கழகத்தின் தலைமை கழக பேச்சாளர் ஜெகதீச பாண்டியன்

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் செய்தியாளர்களை சந்திக்காதது குறித்து புதிய விளக்கம் அளித்த தமிழக வெற்றி கழகத்தின் தலைமை கழக பேச்சாளர் அமைதியின் மூலமாக தமிழகத்தில் விஜய் மெளன புரட்சியை செய்து கொண்டிருப்பதாக பேசியுள்ளார். 


கள்ளக்குறிச்சி மந்தைவெளி பகுதியில் உள்ள பொதுக்கூட்ட மேடையில் தமிழக வெற்றிக் கழகத்தின் கள்ளக்குறிச்சி மேற்கு மாவட்டம் சார்பாக மாபெரும் பொதுக்கூட்டம் மாவட்ட செயலாளர் பிரகாஷ் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக  தமிழக வெற்றி கழகத்தின் தலைமைக் கழக பேச்சாளர் ஜெகதீச பாண்டியன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகையில் "டுபாகூர் பொலிடிசியன் இன் இந்தியா" என கூகுளில் தேடினால்  கூட நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பெயர் தான் வரும் என்றும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் முதலில் எந்தப் பக்கம் இருக்கின்றார் என்பதை சொல்ல வேண்டும் எனக்கூறினார்.

தமிழக வெற்றி கழகம் தொடங்குவதற்கு முன்பு வரை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தம்பி அரசியலுக்கு வர வேண்டும், கொடி அறிமுக செய்தால் வாழ்த்துக்கள் உள்ளிட்ட பல்வேறு விதத்தில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவருக்கு வரவேற்பு அளித்த அவர் தற்போது தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தன்னை தலைவராக ஏற்றுக் கொண்டிருந்தால் என் தம்பியை போன்று ஒரு ஆள் இல்லை என அவர் கூறி இருப்பார், தருதலைகளை எல்லாம் தலைவர்களாக ஏற்றுக்கொள்ளும் பக்குவம் தமிழக வெற்றி கழகத்திற்கு இல்லை என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை கடுமையாக விமர்சித்து பேசினார்.

இதையும் படிங்க: சோறு கூட இல்ல..!! வெளி நாடுகளில் சிக்கித் தவிக்கும் மீனவர்கள்... மீட்டு வர சீமான் வலியுறுத்தல்..!!

நாம் தமிழர் கட்சியின் வாக்கு சதவீதத்தில் சரி பாதி வாக்கு விஜய் மக்கள் இயக்கத்தால் போடப்பட்ட வாக்குகள் என்றும், அதை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மறந்துவிடக்கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் எத்தனை மீடியாக்கள் வந்தாலும் தவிர்த்து செல்லக்கூடிய ஒருவர் என்றும், அதற்கு காரணம் என்னவென்றால் வெறும் வாயால் வடை சுடுபவர் எங்கள் தலைவர் அல்ல, அமைதி மூலமாக ஒரு மௌன புரட்சியை தமிழ்நாட்டில் ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றார் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் என தமிழக வெற்றி கழகத்தின் விஜய் செய்தியாளர்களை சந்திப்பதை தவிர்த்து வருவது குறித்து புதுவிதமான விளக்கம் அளித்தார்.

மேலும் கள்ளக்குறிச்சி நடைபெற்ற இந்த தமிழக வெற்றிக் கழகத்தின் மாபெரும் பொதுக்கூட்டத்தில் மேடையில் யார் பேசினாலும் என்ன பேசினாலும் அங்கிருந்த சிறுவர்கள் சிலர் கையில் வைத்திருந்த தமிழக வெற்றி கழகத்தின் துண்டையும் கொடியையும் மேலே உயர்த்தி சுற்றியவாறு கர கோஷங்களை எழுப்பினர். தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்தில் மேடையில் சிறப்பு அழைப்பாளர்கள் பேசும்போது அங்கிருந்த தமிழக வெற்றி கழகத்தை நிர்வாகிகள் பலரும் தொடர்ந்து விசில் அடித்தவாறு அவர்களுக்கு இடையூறு செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: “இந்த நாய்களிடம் சிக்க வேண்டாம்...” - சீமானை சீண்டிய நாஞ்சில் சம்பத்... சிவகார்த்திகேயனையும் விட்டு வைக்கலையே...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share