கரூர் சம்பவம்... SIT-க்கு எதிர்ப்பு... சிபிஐ விசாரணை கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு...!
கரூர் சம்பவத்தை சிபிஐ விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் தமிழக வெற்றிக்கழகம் வழக்கு தொடர்ந்து உள்ளது
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் உற்சாகத்துடன் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வந்தார். கரூரில் சுற்றுப்பயணம் செய்த விஜய் உற்சாகத்துடன் வரவேற்க காத்திருந்தனர். தொண்டர்களின் இந்த உற்சாகம் சிறிது நேரம் கூட நிலைக்கவில்லை. இந்த பிரச்சாரத்தின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டதில் 41 பேர் உயிரிழந்தனர். பலர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவத்தில் 110 பேர் காயமடைந்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தனர்.
இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இது தொடர்பாக விசாரிக்க தனிநபர் ஆணையத்தை அமைத்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டார். ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார். கரூர் சம்பவம் எதேர்ச்சையாக நடைபெறவில்லை என்றும் அரசியல் கட்சியினரின் தலையிட இருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. கரூர் சம்பவத்தை தமிழக அரசு விசாரிக்கக் கூடாது என்றும் சிபிஐக்கு மாற்ற வேண்டும் எனவும் கூறி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இது தொடர்பான விசாரணையில் பாதிக்கப்பட்டவர்கள் சிபிஐ விசாரணை கேட்கட்டும் என்றும் உங்கள் அரசியலுக்கு நீதிமன்றத்தை பயன்படுத்த வேண்டாம் என்றும் நீதிபதிகள் காட்டமாக தெரிவித்தனர். விசாரணை ஆரம்பகட்டத்தில் உள்ளதால் மனுக்களை ஏற்க முடியாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: பிள்ளையார் சுழியா? சூறாவளியா?... விஜயை கூட்டணிக்குள் இழுக்க இபிஎஸ் போட்ட மெகா கணக்கு... சைலண்ட் மோடில் தவெக...!
சிபிஐ விசாரணை கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக வெற்றிக்கழகம் தொடர்ந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. தமிழக வெற்றிக்கழகம் சார்பில் வழக்கறிஞர்கள் கோபால் சுப்பிரமணியம், ஆரியமா சுந்தரம் ஆகியோர் ஆஜர் ஆகினர். அப்போது, தமிழக வெற்றி கழகத்தின் கருத்துக்களை கேட்காமல் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டதாக தமிழக வெற்றி கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மனு மீதான விசாரணையின் போது மதுரை அமர்வு விசாரித்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் எப்படி விசாரித்தது என்றும் மதுரை அமர்வு மட்டுமே விசாரித்து இருக்க வேண்டும் எனவும் கேள்வி எழுப்பப்பட்டது. இந்த வழக்கில் விஜயை ஏன் சேர்க்கவில்லை என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. கடுமையான கருத்துக்களை சென்னை உயர்நீதிமன்றம் வெளியிட்டுள்ளதாகவும் சிறப்பு புலனாய்வு குழு நீதி கோட்பாடுகளுக்கு முரணானது என்றும் தமிழக வெற்றி கழகம் தரப்பில் வாதிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இது வெட்கக்கெடு BRO... அஜித்திற்கு வந்தால் தக்காளி சட்னி... விஜய்க்கு வந்தால் ரத்தமா? - அம்பலமான தவெக...!