×
 

அறமும் நீதியும் வீழாது... கரூர் விஷயத்தில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு.! தவெக பெருமிதம்..!!

கரூர் அரசு வேலை விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டி தமிழக வெற்றி கழகம் கருத்து தெரிவித்துள்ளது.

கரூரில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பரப்புரை மேற்கொண்ட போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பல உயிர்கள் பறிபோனது. அந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் முதல்வராக பொறுப்பேற்ற பிறகு அரசு வேலை வழங்கப்படும் என்று அறிவித்து அதற்கான ஆணையையும் வழங்கினார். இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் வேலை வழங்க கொடுக்கப்பட்ட அரசாணை நிறுத்தி வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. இதன் பிறகு தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. அப்போது இடைக்கால தடையை நீக்கி உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. 

அறமும் நீதியும் ஒருபோதும் வீழாது என கரூர் அரசு வேலை விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் வழங்கிய தீர்ப்பை சுட்டிக்காட்டை தமிழக வெற்றிக் கழகம் பெருமிதம் தெரிவித்துள்ளது. கரூரிலுள்ள நம் சொந்தங்களுக்கு பணியாணை வழங்கியதற்கு உயர்நீதிமன்றம் விதித்த தடைக்கு, மாண்பமை உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், இதில் அரசியலைக் கலக்க வேண்டாம் என்றும், அரசு வேலைவாய்ப்பு வழங்குவதை எப்படி கேள்விக்குள்ளாக்க முடியும் என்றும் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

உயிரிழந்தவர்களை சித்தரித்து கேலியும் அவமதிப்பும் கலந்த AI வீடியோக்களை உருவாக்கிப் பரப்பியவர்கள் ஒருபுறம், உயிரோடு இருக்கும் அவர்களின் குடும்பங்களின் வாழ்வாதாரத்திற்குக் கிடைத்த உதவியையே சட்டப் போராட்டமாக்கியவர்கள் மறுபுறம் என்று தமிழக வெற்றி கழகம் வேதனை தெரிவித்துள்ளது. 

இதையும் படிங்க: செந்தில்பாலாஜி மீதான டாஸ்மாக் வழக்கு… “விசாரணைக்கு தடை கூடாது”.. தமிழக அரசு கடும் வாதம்..!!

அரசியல் செய்வதற்கு மேடைகள் இருக்கின்றன, தேர்தல்கள் இருக்கின்றன, கொள்கைகள் இருக்கின்றன. ஆனால், துயரத்தில் இருக்கும் குடும்பங்களின் கண்ணீரிலும், வயிற்றிலும், வாழ்வாதாரத்திலும் அரசியல் செய்வதை மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள் என திட்டவட்டமாக கூறப்பட்டுள்ளது. அரசியல் காழ்ப்பிற்கு உச்சநீதிமன்றத்தின் கேள்விகளே இன்று பதிலடியாகி இருப்பதாகவும் உண்மை வெல்லும் என்றும் தமிழக வெற்றி கழகம் தெரிவித்துள்ளது. 

இதையும் படிங்க: காவலர்களின் அர்ப்பணிப்புக்கு அங்கீகாரம்..! முதலமைச்சரின் காவல் விருதுகள் அறிவிப்பு..! சுதந்திர தின கொண்டாட்டத்தில் கவுரவிப்பு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share