தவெக அமைச்சரவையில் விசிக..! தமிழக அரசியலில் செம சர்ப்ரைஸ்..! சூடு பிடிக்கும் களம்..!!
தமிழக வெற்றி கழகத்தின் அமைச்சரவையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இடம்பெறுகிறது.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தமிழக வெற்றி கழகத்தின் அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதை எடுத்து அமைச்சரவையில் பங்கேற்பதாக விசிக அறிவித்துள்ளது. தவெக சார்பில் வெளியான அறிவிப்பு முக்கியத்துவம் பெற்றது. பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, செய்தியாளர்களிடம் பேசியபோது, விசிக தலைவர் திருமாவளவனை அமைச்சரவையில் இணைக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும், அதேபோல் ஐயூஎம்எல் கட்சியும் அமைச்சரவையில் பங்கேற்க வேண்டும் என்பது முதல்வர் விஜய்யின் விருப்பம் என்றும் தெரிவித்தார்.
மதச்சார்பற்ற கட்சிகள் அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என்பதில் தவெக உறுதியாக உள்ளது என்று அவர் வலியுறுத்தினார். இந்த அழைப்பு, தவெக அரசின் விரிவாக்கத் திட்டத்தின் ஒரு பகுதியாகக் கருதப்பட்டது. இந்த அழைப்பு காரணமாக விடுதலை சிறுத்தைகள் கட்சி முக்கிய ஆலோசனையை நடத்தியது.
இதற்கு முன்னதாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தமிழக அமைச்சரவையில் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டது. எம்.எல்.ஏ ஷாஜகான் பெயரை பரிந்துரைப்பதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், தவெக அமைச்சரவையில் விசிக இடம் பெறுகிறது. தமிழக அரசியலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த திருப்புமுனையாக இது அமைந்திருக்கிறது.
இதையும் படிங்க: AI-க்கு தனி துறை..! தமிழகத்தில் டிஜிட்டல் புரட்சிக்கு விஜய் அரசு அதிரடி..!
தமிழக வெற்றி கழகத்தின் அமைச்சரவையில் பங்கு பெறுவது என விடுதலை சிறுத்தைகள் கட்சி முடிவு எடுத்துள்ளது என கட்சியின் பொருளாளர் எஸ். எஸ் பாலாஜி அறிவித்துள்ளார். இது தமிழ்நாட்டு அரசியலில் திருப்புமுனையான முடிவு என்றும் தெரிவித்துள்ளார். நிர்வாகிகளுடன் கலந்து பேசி ஆலோசனை நடத்தி இது போன்ற முக்கிய முடிவை எடுத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: திருச்சி கிழக்கு திருமாவளவனுக்கு!! சிதம்பரம் எம்.பி., தொகுதி த.வெ.க.,வுக்கு! புது டீல் ரெடி!