#BREAKING: கரூர் சம்பவம் "திட்டமிட்ட சதி"... குண்டைத் தூக்கிப் போட்ட தவெக...!
கரூரில் நிகழ்ந்தது தற்செயலான சம்பவம் அல்ல என்றும் திட்டமிட்ட சதி என்றும் தமிழக வெற்றிக்கழகம் குற்றம் சாட்டியுள்ளது.
தமிழ்நாட்டின் கரூர் மாவட்டம் வேலுசாமிபுரம் பகுதி ஒரு அரசியல் உற்சாகத்தின் மையமாக மாறியது. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய், தனது சுற்றுப்பயணப் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இங்கு பேச்சு நிகழ்த்தினார். ஆனால், அந்த உற்சாகம் விரைவில் ஒரு பரிதாபமான துயரமாக மாறியது. அதிகரித்த கூட்ட நெரிசலில் சிக்கி, 9 குழந்தைகள், 17 பெண்கள் உட்பட 39 பேர் உயிரிழந்தனர். பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
போலீஸ் அனுமதி மனுவில் 10 ஆயிரம் பேர் மட்டுமே பங்கேற்பார்கள் என்று குறிப்பிட்டிருந்த போதிலும், உண்மையில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கூட்டத்தில் திரண்டனர். விஜய் 6 மணி நேரம் தாமதமாக வந்ததால், வெயில் வாட்டும் பகலில் காத்திருந்த மக்கள் சோர்வடைந்தனர். குழந்தைகள் மற்றும் பெண்கள் அதிகம் இருந்ததால், 9 வயது சிறுமி ஒருவர் காணாமல் போனதாக வந்த தகவல் கூட்டத்தை இன்னும் குழப்பமானதாக்கியது.
கரூர் மாவட்டத்திற்கு பல்வேறு அரசியல் பற்றிய தலைவர்கள் படையெடுத்துள்ளனர். இரவோடு இரவாக முதலமைச்ச ஸ்டாலின் கரூருக்கு சென்று உயிரிழந்தவர்கள் உடல்களுக்கு அஞ்சலி செலுத்தியதுடன் அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். காயமடைந்து சிகிச்சை பெறுபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். தமிழக அரசு சார்பில் 10 லட்சமும், விஜய் தரப்பில் 20 லட்சமும், மத்திய அரசு தரப்பில் 2 லட்ச ரூபாயும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: #BREAKING: கரூருக்கு உதவ மத்திய அரசு தயார்… உதவிக்கரம் நீட்டிய அமித் ஷா…!
தமிழக வெற்றி கழகத்தினர் முறையாக வழிமுறைகளை பின்பற்றவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கரூர் விஜய் பிரச்சாரத்தின் போது 39 பேர் உயிரிழந்தது ஏதேர்ச்சையாக நடந்தது அல்ல என்றும் திட்டமிட்ட சதி எனவும் தமிழக வெற்றிக்கழகம் குற்றம் சாட்டியுள்ளது. உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக வெற்றிக்கழகம் முறையிட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: #BREAKING: திடீர் மனமாற்றம்... இரவோடு இரவாக தனி விமானம் மூலம் கரூர் விரைகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்...!