×
 

BRO! அரசியல் SATURDAY பார்ட்டி இல்ல… 24×7 DUTY… வைரலாகும் போஸ்டர்கள்

தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ள நிலையில் அவரை விமர்சித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.

2026 சட்டமன்ற தேர்தலையொட்டி செப்டம்பர் 13ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 20ஆம் தேதி வரை விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். செப்டம்பர் 13-இல் திருச்சி, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களிலும் செப்டம்பர் 20 ஆம் தேதி நாகை, திருவாரூர், மயிலாடுதுறையில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். செப்டம்பர் 27ஆம் தேதி வடசென்னை மற்றும் திருவள்ளூரில் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அக்டோபர் 4 மற்றும் ஐந்தாம் தேதிகளில் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோட்டில் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். 

அக்டோபர் 11ல் குமரி நெல்லை தூத்துக்குடி அக்டோபர் 18ல் காஞ்சி வேலூர் ராணிப்பேட்டையில் விஜய் சுற்றுப்பயணம் நடத்துகிறார். அக்டோபர் 25ல் தென் சென்னை, செங்கல்பட்டு, நவம்பர் 11ல் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூரில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். மேலும், நவம்பர் எட்டாம் தேதி திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரத்தில் சுற்றுப்பயணம் நடத்துகிறார். நவம்பர் 15ஆம் தேதி தென்காசி, விருதுநகர் மாவட்டங்களிலும் 22ஆம் தேதி கடலூர், 29ஆம் தேதி சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

15 சனிக்கிழமைகள் மற்றும் ஒரு ஞாயிற்றுக்கிழமைகளில் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரே நாளில் மூன்று முதல் நான்கு மாவட்டங்களில் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். திருச்சி, அரியலூரைத் தொடர்ந்து பெரம்பலூரில் விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள இருந்தார். ஆனால் பிரச்சார வாகனமே உள்ளே நுழைய முடியாத அளவுக்கு பெரம்பலூரை ஸ்தம்பித்து போகும் நிலையில் கூட்டம் கூடியது. இதனால் விஜய் தனது பெரம்பலூர் சுற்றுப்பயணத்தை ரத்து செய்துவிட்டு சென்னைக்கு திரும்பிவிட்டார்.

இதையும் படிங்க: ஹப்பா… என்னா கூட்டம்! ஸ்தம்பித்த பெரம்பலூர்… சென்னைக்கே RETURN வந்த விஜய்

இந்த நிலையில், விஜயின் சனிக்கிழமை சுற்றுப்பயணங்களை சுட்டிக்காட்டி கண்டன போஸ்டர்கள் அங்கங்கே ஒட்டப்பட்டுள்ளன. BRO! அரசியல் SATURDAY பார்ட்டி இல்ல… 24×7 DUTY என்றும் BRO அரசியல்னா வீக் எண்ட் மூவி ரிலீஸ் நினைக்கிறார் என்றும் விமர்சித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டு உள்ளன.

இதையும் படிங்க: பாத்து சூதானமா நடந்துக்கோங்க மக்கா! வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட தவெக…

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share