களமாட தயார்... தேர்தல் பணி மும்முரம்... பூத் ஏஜெண்டுகள் எண்ணிக்கையை உயர்த்த தவெக முடிவு..!
பூத் ஏஜெண்டுகள் எண்ணிக்கையை உயர்த்தும் பணியில் தமிழக வெற்றிக்கழகம் தீவிரம் காட்டி வருகிறது.
தமிழ் சினிமாவின் தளபதி என்று அழைக்கப்படும் நடிகர் விஜய், தனது திரை வாழ்க்கையின் மூலம் தமிழக மக்களின் இதயங்களை கைப்பற்றியவர். ஆனால், அவரது அரசியல் பயணம் தொடங்கியபோது, அந்த ரசிகர்களின் அன்பு இன்னும் ஆழமான, உணர்ச்சிகரமான வடிவத்தை அடைந்தது.
2024 பிப்ரவரி 2 அன்று தமிழக வெற்றி கழகம் (த.வெ.க) என்ற பெயரில் அரசியல் கட்சியை தொடங்கியபோது, விஜயின் ரசிகர்கள் அது வெறும் கட்சி அல்ல, அவர்களின் கனவுகளுக்கான ஒரு இயக்கம் என்று உணர்ந்தனர். இளைஞர்கள் பட்டாளம் விஜய்க்கு ஆதரவாக உள்ளனர்.
இந்த அன்பு, வெறும் பட ரசிகர்களின் உற்சாகத்தைத் தாண்டி, அரசியல் அடிப்படை உருவாகி, ஆதரவு பெற்றுள்ளார். சமீபத்தில் நிகழ்ந்த கரூர் சம்பவம் தமிழக வெற்றி கழகத்திற்கு சற்று பின்னடைவை ஏற்படுத்தியது. அதிலிருந்து மீண்டும் தமிழக வெற்றி கழகம் மீண்டும் கட்சி பணியை தீவிரப்படுத்தி வருகிறது. தேவையான அளவு பொறுப்பாளர்களை நியமிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பூத் ஏஜெண்டுகள் எண்ணிக்கையை உயர்த்தும் பணியில் தமிழக வெற்றிக்கழகம் தீவிரம் காட்டி வருகிறது.
இதையும் படிங்க: செங்கோட்டையனுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.... அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆவேசம்...!
மாவட்டச் செயலாளர்கள் பூத் முகவர்களுக்கான விண்ணப்பங்களை விரைவில் பூர்த்தி செய்து தலைமைக்கு அனுப்ப உத்தரவு பிறப்பித்துள்ளது. ஏற்கெனவே ஒரு பாகத்துக்கு ஒரு முகவர் என்ற எண்ணிக்கையை பாகத்திற்கு 10 வரை உயர்த்த அறிவுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. கட்சியை மேலும் பலப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இதையும் படிங்க: எனக்கு உறுதுணை செங்கோட்டையன்... பதவிகளை வாரிவழங்கி விஜய் அறிவிப்பு...!