×
 

மீண்டும் மீண்டுமா? அனுமதி வாங்கலையா?... கொளத்தூரில் விஜய் பிரச்சாரம் செய்வதில் சர்ச்சை..!!

கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் விஜய் பிரச்சாரம் செய்வதில் சர்ச்சை ஏற்பட்டது.

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற இருக்கும் நிலையில், இன்று முதல் அரசியல் கட்சியினர் வேட்பு மனு தாக்கல் செய்யத் தொடங்குகின்றனர். இந்திய தேர்தல் ஆணையம் மார்ச் 15 அன்று அறிவித்த தேர்தல் அட்டவணையின்படி, தமிழ்நாட்டின் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இந்தத் தேர்தல் நடைபெறுகிறது. மொத்தம் சுமார் 5.67 கோடி வாக்காளர்கள் இந்தத் தேர்தலில் பங்கேற்க உள்ளனர்.

இதில் ஆண்கள் சுமார் 2.77 கோடியும், பெண்கள் சுமார் 2.89 கோடியும் அடங்குவர். முதல் முறையாக வாக்களிக்கும் இளம் வாக்காளர்களின் எண்ணிக்கை சுமார் 12.51 லட்சம் என்று கணக்கிடப்பட்டுள்ளது. வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை ஏப்ரல் 7 ஆம் தேதி நடைபெறும். இந்த நிலையில், வேட்பு மனு தாக்கல் செயல்முறை இன்று முதல் தொடங்குவதால் அரசியல் கட்சியினர் வேட்பு மனுத் தாக்கல் செய்ய மும்முரம் காட்டி வருகின்றனர். பெரம்பூர் தொகுதியில் போட்டியிடுவதற்காக தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தனது வேட்பு மனுவை இன்று தாக்கல் செய்தார்.

இதைத்தொடர்ந்து பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியில் இருந்து தனது பிரச்சாரத்தை தொடங்கினார். தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் விஜய் தனது தேர்தல் பிரச்சாரத்தை நிகழ்த்தி விசில் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். தொடர்ந்து விஜய் குளத்தூர் சட்டமன்ற தொகுதியில் பிரச்சாரம் நடத்த இருப்பதாக அறிவிக்கப்பட்டது. பெரவள்ளூர் செம்பியம் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் விஜய் பரப்புரை மேற்கொள்ள இருக்கிறார்.

இதையும் படிங்க: தவெக துண்டால் முகத்தை மூடி ட்ரான்ஸ்பார்மர் மீது ஏறிய இளைஞர்கள்... விஜய் பரப்புரையில் பரபரப்பு..!!

பெரவள்ளூரில் மட்டும் விஜய் பரப்புரை மேற்கொள்ள அனுமதி பெற்றதாகவும் கொளத்தூர் பகுதியில் பரப்புரை செய்ய அனுமதி பெறவில்லை என்ற சர்ச்சை எழுந்துள்ளது. செம்பியம் காவல்துறையினர் மற்றும் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் பேச்சுக்குப் பிறகு ஒலிபெருக்கி பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டது. இரு இடங்களில் அனுமதி பெற வேண்டிய நிலையில் ஒரு இடத்தில் மட்டுமே விஜய் பரப்புரைக்கு அனுமதி பெற்றதாக சர்ச்சை எழுந்ததால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. 

இதையும் படிங்க: #BREAKING: என் நெஞ்சில் குடியிருக்கும் பெரம்பூர் தொகுதி மக்களே..!! மாஸாக பிரச்சாரத்தை தொடங்கிய விஜய்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share