×
 

#BREAKING: என்னை பழிவாங்குங்கள்… ஆனா…! கரூர் சம்பவம் குறித்து வாய் திறந்த விஜய்…!

கரூர் சம்பவத்திற்கு பிறகு முதல்முறையாக வீடியோ வாயிலாக விஜய் தனது கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.

தமிழ்நாட்டின் அரசியல் அரங்கில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய கரூர் சம்பவம், 2025 செப்டம்பர் 27 அன்று நிகழ்ந்தது. தமிழக வெற்றிக் கழகம் தலைவர் மற்றும் நடிகர் விஜய் நடத்திய அரசியல் பிரச்சாரக் கூட்டத்தில், கூட்ட நெரிசலால் 41 பேர் உயிரிழந்தனர், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 

விஜயின் பிரச்சாரத்திற்கு 10,000 பேர் என்று எதிர்பார்த்த கூட்டம் 27,000-ஐத் தாண்டியது. விஜய்யின் பேச்சின் போது, திடீர் நெரிசல் ஏற்பட்டது. 

இந்தப் பயங்கர சம்பவம், கூட்ட மேலாண்மை, பாதுகாப்பு இன்னும் பல சிக்கல்களை வெளிப்படுத்தியது. இதன் தாக்கத்தைத் தீர்க்க, தமிழ்நாடு அரசு அமைத்த தனிநபர் ஆணையம், சம்பவத்தின் காரணங்களை ஆழமாக விசாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.

இதையும் படிங்க: முடிவு வரட்டும்... அப்ப இருக்கு... கரூர் சம்பவம் குறித்து பொன்முடி ஆவேசம்...!

கரூர் சம்பவம் குறித்து இதுவரை விஜய் எவ்வித கருத்தும் தெரிவிக்காத நிலையில், திடீரென வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், என்னை பழி வாங்குங்கள் ஆனால், என் தொண்டர்களையோ அல்லது நிர்வாகிகளையோ பழிவாங்க வேண்டாம் என கூறினார்.  5 மாவட்டங்களில் மக்களை சந்தித்துள்ளேன், கரூரில் மட்டும் ஏன் இப்படி நடந்தது?., எந்த நேரத்திலும் மக்கள் பாதுகாப்பே முக்கியம் என நினைத்தேன்., எங்கள் வலிகளை புரிந்துகொண்ட அரசியல் கட்சிகளுக்கு நன்றி என கூறினார். கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் விரைவில் உண்மை வெளியே வரும் என்றார்.

இதையும் படிங்க: பேசுற நிலையில இல்ல...கரூர் சம்பவத்திற்கு பின் ஆதவ் அர்ஜுனா முதல்முறையாக பேட்டி...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share