×
 

விஜய் சொன்ன ஒற்றை வார்த்தை..! விசில் கோலமிட்டு ஆதவ் அர்ஜுனாவை வரவேற்ற மக்கள்..!

விசில் கோலம் போட்டு வில்லிவாக்கம் தொகுதி தவெக வேட்பாளர் ஆதவ் அர்ஜுனாவை மக்கள் வரவேற்றனர்.

தமிழகத்தின் 2026 சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தில் தமிழக வெற்றிக் கழகம் ஒரு தனித்துவமான மற்றும் மக்கள் நெருக்கமான அணுகுமுறையை முன்னெடுத்து வருகிறது. வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஆதவ் அர்ஜுனாவுக்கு மக்கள் அளித்த வரவேற்பு அதன் சிறப்பம்சமாக அமைந்துள்ளது. குறிப்பாக, தவெகவின் தேர்தல் சின்னமான விசில்ஐ வீட்டு வாசல்களில் கோலமாக வரைந்து மக்கள், குறிப்பாகப் பெண்கள், வழங்கிய ஆதரவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிகழ்வு அரசியல் பிரசாரத்தின் பாரம்பரிய எல்லைகளைத் தாண்டி, மக்களின் அன்றாட வாழ்க்கையுடன் இணைந்த ஒரு புதிய பரிமாணத்தை அளித்துள்ளது. தவெக தலைவர் விஜய், தேர்தல் அறிக்கை வெளியீட்டு நிகழ்வின்போது ஒரு உணர்ச்சிகரமான கோரிக்கையை முன்வைத்தார். “என் அம்மா, அக்கா, தங்கைகளுக்கு என் சார்பில் ஒரு சின்ன ரிக்வெஸ்ட். நீங்கள் எல்லாரும் எனக்காக உங்கள் வீட்டு வாசலில் விசில் சின்னத்தை கோலமாகப் போடுங்கள். அது எனக்கு கொடுக்கும் பெரிய ஆதரவாக இருக்கும்” என்று அவர் பெண்களிடம் வேண்டுகோள் விடுத்தார். இந்தக் கோரிக்கை உடனடியாக தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது.

விஜய்யின் இந்த அழைப்பு, அரசியலை வெறும் மேடைப் பேச்சாக மட்டும் வைத்திராமல், வீடு வீடாக, தெரு தெருவாக மக்களின் பங்கேற்புடன் கொண்டு செல்லும் வகையில் அமைந்தது.இந்தக் கோரிக்கைக்கு மக்கள், குறிப்பாக வில்லிவாக்கம் தொகுதியில் வசிக்கும் பெண்கள், உற்சாகமான பதிலளிப்பை வழங்கினர். பல வீடுகளின் வாசல்களில் விசில் சின்னத்தை அழகிய கோலங்களாக வரைந்து, தங்கள் ஆதரவை வெளிப்படுத்தினர். 

இதையும் படிங்க: "உனக்கு அறிவில்லையா"..? தவெக ஆனந்த் திட்டினாரு..! அஜிதா ஆக்னல் கண்ணீர் மல்க பேட்டி..!

வில்லிவாக்கம் தொகுதியில் ஆதவ் அர்ஜுனா தீவிரமாகக் களப்பணியில் ஈடுபட்டு வருகிறார். கதவு கதவாகச் சென்று மக்களைச் சந்தித்து, அவர்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்து, தவெகவின் கொள்கைகளை எடுத்துரைக்கிறார். இந்தச் சூழலில் வீடுகளில் வரையப்பட்ட விசில் கோலங்கள் அவருக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்தன. 

இதையும் படிங்க: #BREAKING: "வெற்றித் தமிழ்நாடு"... தவெக வாக்குறுதி புத்தகத்தை வெளியிட்ட விஜய்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share