×
 

முதல்வர் பதவி ஏற்பு நிகழ்ச்சி..! விஜயுடன் டிஐஜி தர்மராஜன் முக்கிய ஆலோசனை..!

தமிழக முதல்வராக விஜய் நாளை பதவி ஏற்கும் நிலையில் டி.ஐ.ஜி தர்மராஜன் முக்கிய ஆலோசனை நடத்தினார்.

தமிழகத்தில் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்தது. நீ நான்காம் தேதி வாக்கு எண்ணிக்கை நடந்த முடிவுகள் அறிவிக்கப்பட்டன. தமிழக வெற்றிக்கழகம் பெரும் வெற்றியை குவித்தது. தமிழக அரசியல் களம் கடந்த சில நாட்களாக பரபரப்பாக இருந்து வருகிறது. தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தலைமையிலான கட்சி 2026 சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்று ஒற்றைப் பெரும்பான்மைக்கு சற்று குறைவான பலத்துடன் முன்னிலை வகித்த நிலையில், நாளை அவர் தமிழக முதலமைச்சராக பதவி ஏற்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தப் பின்னணியில், விஜய்யின் நீலாங்கரை இல்லத்திற்கு டிஐஜி ஜி. தர்மராஜன் தலைமையிலான போலீஸ் குழு இரவு நேரத்தில் நேரடியாக வந்து நடத்திய ஆலோசனை பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. விஜய் தனது பனையூர் அலுவலகத்தில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏக்களுடன் முக்கிய ஆலோசனை நடத்தி, ஆட்சி அமைப்பு தொடர்பான விவாதங்களை முடித்திருந்தார்.

தமிழக வெற்றி கழகத்தின் சட்டமன்ற கட்சி தலைவராக விஜய் தேர்ந்தெடுக்கப்பட்டார். இடைத்தொடர்ந்து விஜய் நாளை பதவியேற்கும் நிகழ்ச்சிக்காக முக்கிய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. நேரு உள்விளையாட்டு அரங்கில் விஜய் பதவி ஏற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இதையும் படிங்க: TVK+ CONGRESS..! வகுப்புவாத சக்திகளை விலக்கி வைக்கணும்..! டிமாண்ட் வைத்து கூட்டணிக்குள் நுழைந்த காங்கிரஸ்..!

தமிழகத்தின் புதிய முதல்வராகிறார் விஜய். இந்த நிலையில், டிஐஜி தர்மராஜன் விஜயுடன் முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளார். பாதுகாப்பு ஏற்பாடுகள், நடைமுறை விதிகள் உட்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசித்ததாக கூறப்படுகிறது. தமிழக முதலமைச்சராக விஜய் பதவியேற்கும் நிகழ்வு பெறும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 

இதையும் படிங்க: #BREAKING: முறிந்தது திமுக உறவு..! தமிழக வெற்றி கழகத்திற்கே ஆதரவு..! காங்கிரஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share