இன்று வெளியாகிறது தவெக வாக்குறுதி புத்தகம்..! நீலாங்கரையிலிருந்து புறப்பட்ட விஜய்..!
தவெக வாக்குறுதி புத்தகம் இன்று வெளியாகிறது.
தமிழக வெற்றிக் கழகத்தின் முழுமையான தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்படும் என்று அக்கட்சியின் தலைவர் விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தார். முன்னதாகத் திருப்பூரில் நடைபெற்ற பரப்புரையின் போது இதற்கான அறிவிப்பை அவர் வெளியிட்டார். இன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் விடுதியில் நடைபெறும் சிறப்பு நிகழ்ச்சியில், தவெக தலைவர் விஜய் பங்கேற்று கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிடுகிறார்.
ஏற்கனவே தனது பரப்புரைகளில் தேர்தல் அறிக்கையின் சில முக்கிய அம்சங்களை விஜய் கோடிட்டுக் காட்டியுள்ளார். கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர் குடும்பங்களுக்கு ஆண்டுதோறும் ₹30,000 வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். கைத்தறிகளுக்கு 500 யூனிட்களும், விசைத்தறிகளுக்கு 1,500 யூனிட்களும் இலவச மின்சாரம் வழங்கப்படும். காவலர்களுக்குக் குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் ₹25,000 ஆக உயர்த்தப்படும். அரசு ஊழியர் இடமாற்றங்களில் வெளிப்படைத்தன்மை கொண்டு வரப்படும். 5 ஏக்கருக்கும் குறைவாக நிலம் வைத்துள்ள விவசாயிகளின் கூட்டுறவுச் சங்கக் கடன்கள் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும்.
திருப்பூரில் பேசிய விஜய், பொய் வாக்குறுதிகள் அளித்து உங்களை ஏமாற்ற மாட்டேன். என்னை உங்கள் வீட்டுப் பிள்ளையாகக் கருதி ஒரே ஒரு வாய்ப்பு தாருங்கள் என உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார். ஊழலற்ற நிர்வாகம் மற்றும் வெளிப்படையான அரசு என்பதைத் தனது கட்சியின் முக்கியக் கொள்கையாக அவர் முன்வைத்துள்ளார்.
இதையும் படிங்க: இப்படித்தான் ஓட்டு போடணும்..! மாதிரி EVM இயந்திரத்துடன் பரப்புரை...! Tvk நிர்வாகிகளின் புது முயற்சி..!
இதனுடைய தேர்தல் வாக்குறுதி புத்தகத்தை வெளியிடும் நிகழ்வுக்காக விஜய் புறப்பட்டார். சென்னை நுங்கம்பாக்கத்தில் பிரம்மாண்டமாக நடைபெறும் இந்த நிகழ்வில் பங்கேற்பதற்காக சென்னை நீலாங்கரையில் உள்ள தனது இல்லத்தில் இருந்து தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் புறப்பட்டு சென்றார். இன்னும் சற்று நேரத்தில் தமிழக வெற்றி கழகத்தின் வாக்குறுதி புத்தகம் வெளியிடப்பட உள்ளது. இது அரசியல் வட்டாரத்தில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், நாளை தவெக வெளியிட உள்ள தேர்தல் அறிக்கை அக்கட்சியின் பலத்தை நிரூபிக்கும் ஒரு முக்கிய ஆவணமாகப் பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: நாளை மாலை தவெக-வின் முழு வாக்குறுதிகள் பட்டியல்! சென்னை நுங்கம்பாக்கத்தில் விஜய் வெளியிடுகிறார்!