அரசியலில் அதிரடித் திருப்பம்..! ஆளுநரை சந்திக்கணும்..! ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார் விஜய்..!!
தமிழக பொறுப்பு ஆளுநரை சந்திக்க விஜய் நேரம் கேட்டுள்ளார்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற்றது. தேர்தல் முடிவுகள் மே நான்காம் தேதி ஆன நேற்று வெளியானது. தமிழக வெற்றி கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்றது. மீண்டும் ஆட்சி அமைக்கும் என எதிர்பார்த்து திமுக கடுமையான தோல்வியை சந்தித்தது. அதிமுக எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தில் இருந்து மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டது. திமுக தற்போது எதிர்க்கட்சியாக உருவெடுத்துள்ளது.
சட்டமன்றத் தேர்தலில் யாருமே எதிர்பாக்காத வகையில் மாபெரும் வெற்றியை தனித்து நின்று பெற்று இருக்கிறது தமிழக வெற்றிக் கழகம். இன்னும் ஆட்சி அமைக்க பெரும்பான்மை கிடைக்காத நிலையில் பிற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
இந்த நிலையில், தமிழக வெற்றி கழகத்தின் சட்டமன்ற கட்சி தலைவராக விஜய் தேர்ந்தெடுக்கப்பட்டார். சட்டமன்ற குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள விஜய், முதலமைச்சர் ஆக பதவி ஏற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை பனையூரில் நடந்த தமிழக வெற்றி கழகத்தின் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: #BREAKING: தவெக சட்டமன்ற கட்சி தலைவராகிறார் விஜய்..! பனையூர் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் முக்கிய முடிவு..!
அனைத்து எம்எல்ஏக்களின் ஏகோபித்த ஆதாரத்துடன் விஜய் சட்டமன்ற கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் தமிழக ஆளுநரை சந்திக்க விஜய் நேரம் கேட்டு இருக்கிறார். தமிழக வெற்றி கழகத்தின் சட்டமன்ற குழு தலைவராக விஜய் தேர்ந்தெடுக்க பட்டிருக்கும் நிலையில் தமிழ்நாடு ஆளுநரை நாளை சந்திக்க நேரம் கேட்டுள்ளார். தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை நேரில் சந்தித்து ஆட்சி அமைக்க தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் உரிமைக் கோருகிறார்.
இதையும் படிங்க: காங். தொண்டர்கள் ஏற்கனவே Tvk கூட்டணியை விரும்புனாங்க..! கிரிஷ் ஜோடங்கர் கருத்தால் சலசலப்பு..!