காரைக்குடியில் சூறாவளி பிரச்சாரம்..!! மதுரை சென்றடைந்த விஜய்... தொண்டர்கள் குஷி..!!
காரைக்குடியில் பிரச்சாரம் செய்வதற்காக விஜய் மதுரை விமான நிலையம் சென்றடைந்தார்.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தலைமையில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரம் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்தத் தேர்தலில் தவெக முதன்முறையாக முழு அளவில் களமிறங்கியுள்ளது. மார்ச் 29 அன்று சென்னையில் நடைபெற்ற வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டத்தில் விஜய் 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார்.
இதில் அவர் தானே பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிவித்தார். வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட உடனேயே பிரச்சாரப் பணிகள் தீவிரமடைந்தன. தேர்தல் ஆணைய விதிமுறைகளுக்கு உட்பட்டு, வீடு வீடாக வாக்கு சேகரிப்பு, தெரு முனை கூட்டங்கள், பொதுக் கூட்டங்கள் என பல்வேறு வடிவங்களில் பிரச்சாரம் முன்னெடுக்கப்படுகிறது.
பல தொகுதிகளில் வேட்பாளர்கள் தங்கள் கட்சித் தொண்டர்களுடன் சேர்ந்து வாக்காளர்களை நேரடியாக சந்தித்து, “ஒரு முறை வாய்ப்பு கொடுங்கள், தலைமுறைக்கும் மாற்றம் வரும்” என்ற முழக்கத்துடன் மக்களிடம் சென்று கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில், காரைக்குடியில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் இன்று பிரச்சாரம் மேற்கொள்கிறார். தமிழக வெற்றிக்கழக வேட்பாளர்களை ஆதரித்து அவர் பரப்புரை செய்கிறார்.
இதையும் படிங்க: யாருமே எதிர்பார்க்காத ட்விஸ்ட்... வாண்டடாக வம்பிழுக்கும் விஜய்... பயண திட்டத்தில் திடீர் மாற்றம்...!
இந்த நிலையில் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்ட விஜய் மதுரை சென்றடைந்தார். அங்கிருந்து சாலை மார்க்கமாக விஜய் காரைக்குடிக்கு செல்கிறார். காரைக்குடியில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் வேட்பாளராக பிரபு என்பவர் போட்டியிடுகிறார். காரைக்குடி தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் களம் காண்கிறார். இந்த நிலையில் விஜயின் காரைக்குடி பிரச்சாரம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இதையும் படிங்க: ரூ.5,000 கோடி சம்பாதிக்க ப்ளான் போட்டாரு இபிஎஸ்!! விஜய் ஆதரவுக்கு ஸ்கெட்சும் போட்டாரு! செங்கோட்டையன் பகீர்!