இந்திய ராணுவத்தின் நடவடிக்கைக்கு ராயல் சல்யூட்... தவெக தலைவர் விஜய் ஆதரவு!
பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக இந்திய ராணுவம் மேற்கொண்ட தாக்குதல் சம்பவத்திற்கு தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.
இந்திய ராணுவத்தின் ஆப்ரேஷன் சிந்தூர் தாக்குதலுக்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். காரணம்...தீவிரவாதத்தை ஒழிப்பது என்ற ஒற்றைக் கருத்தில் அனைவரும் ஒன்றிணைகின்றனர். தீவிரவாதத்தை ஒழிப்பதில் இந்திய அரசுடனும் ராணுவத்துடனும் துணை நிற்போம் இன்று பல்வேறு அரசியல் கட்சியினரும் கைகோர்த்துள்ளனர்.
குறிப்பாக, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட பலரும் தங்கள் ஆதரவை தெரிவித்தனர். இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் ஆப்ரேஷன் சிந்தூருக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பகல்காம் தாக்குதலுக்கு பாகிஸ்தானே காரணம்! ஆதாரத்தோடு இந்திய ராணுவம் பகிரங்க குற்றச்சாட்டு..
இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், இந்திய ராணுவத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு ராயல் சல்யூட் என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க: ஓவைசியின் பூரிக்க வைக்கும் தேசப்பற்று..! ஒரு அடி கூட எதிரி எடுத்து வைக்கக்கூடாது..!