தவெகவில் சேர்ந்தவர்களுக்கு ஜாக்பாட்..! விஜயின் மாஸ்டர் மூவ்..! புதிய பதவிகள் அறிவிப்பு..!!
மாற்றுக் கட்சியிலிருந்து தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தவர்களுக்கு புதிய பதவிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றி கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று முதன்மை கட்சியாக உருவெடுத்தது. தற்போது தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் விஜய் ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து மாற்றுக் கட்சியினர் தமிழக வெற்றி கழகத்தில் இணையும் நிகழ்வு இணையும் நிகழ்வு நடைபெற்று வருகிறது. குறிப்பாக அதிமுகவில் இருந்து எம்எல்ஏக்கள், முன்னாள் எம்எல்ஏக்கள், முன்னாள் அமைச்சர்கள் என முக்கிய தலைகள் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்த நிகழ்வு பெரும் மாற்றத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.
ஏராளமான உட்கட்சி பூசல்கள் நிலவி வந்த நிலையில் அதிமுகவின் அஸ்திவாரமே உடையும் நிலைக்கு தள்ளப்பட்டது. முதல்வர் விஜயின் தலைமையை ஏற்று தமிழக வெற்றி கழகத்தில் தங்களை இணைத்துக் கொள்ளும் நிகழ்வு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அவ்வாறு கட்சியிலிருந்து பிரிந்து வந்தவர்களுக்கு தமிழக வெற்றி கழகத்தில் உரிய அங்கீகாரம் வழங்கப்படும் என்று ஏற்கனவே கூறப்பட்டு வந்தது.
இந்த நிலையில், மாற்றுக் கட்சியிலிருந்து தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தவர்களுக்கு பதவி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை கட்சியின் தலைவர் ஆன விஜய் வெளியிட்டுள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் முதன்மை செய்தி தொடர்பாளர்களாக வைகைச் செல்வன், வி.பி. கலைராஜன் மற்றும் சி.மகேந்திரன் நியமனம் செய்யப்பட்டுள்ளனர், அதிமுகவில் இருந்து விலகி தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தவர்களுக்கு பதவி வழங்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: முதல்வர் விஜய்க்கு நெருக்கமானவர்களுக்கு அரசு பதவிகள்? அரசாணை இல்லாத நியமனங்கள்! தவெக அரசில் சர்ச்சை!
கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து விலகி தமிழக வெற்றி கழகத்தில் இணைந்த மகேந்திரனுக்கு செய்தி தொடர்பாளர் பதவி வழங்கப்பட்டிருக்கிறது. சசிரேகா, அமெரிக்கா நாராயணன் ஆகியோருக்கு தேசிய செய்தி தொடர்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. புதிய நிர்வாகிகள் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டுள்ள முதல்வரும் தமிழக வெற்றி கழக தலைவருமான விஜய் கட்சி தொண்டர்கள் மற்றும் தோழர்கள் புதிய நிர்வாகிகளுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
இதையும் படிங்க: கருகிய பயிர்கள்... தவிக்கும் விவசாயிகள்..! உடனடி இழப்பீட்டுக்கு அழுத்தம் கொடுக்கும் EPS..!