#BREAKING: தவெக +தேமுதிக +பாமக மெகா கூட்டணி? விஜயின் தேர்தல் கணக்கு..!
2026 சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி இல்லை என தமிழக வெற்றி கழகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
தமிழக வெற்றிக் கழகம் பாஜகவுடன் கூட்டணி வைக்க வாய்ப்புள்ளதாக பரவலாக பேசப்பட்டு வந்தது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தமிழக வெற்றி கழக துணை பொதுச்செயலாளர் நிர்மல் குமார் கூட்டணி தொடர்பாக தெளிவான விளக்கம் அளித்தார். அப்போது தமிழக வெற்றி கழகத்தின் தலைமையில் கூட்டணி என்பதின் விஜய் உறுதியாக இருப்பதாகவும், 2026 சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார். மேலும் பாஜக கொள்கை எதிரி என்பதை தமிழக வெற்றி கழகம் தெளிவுபடுத்தி உள்ளதாகவும் அவர் கூறினார்.
தேர்தலுக்கு இன்னும் ஆறு மாதத்திற்கும் மேலாக காலம் இருப்பதாகவும், கூட்டணி தொடர்பாக பிறகு முடிவெடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். அது மட்டுமல்லாது 2026 சட்டமன்ற தேர்தலில் மெகா கூட்டணியை அமைப்பதில் விஜய் உறுதியாக இருப்பதாக நிர்மல் குமார் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பேச்சளவில் தான் சிறுபான்மையினர் பிரச்சனையா? நம்பிய மக்களுக்கு இதுதான் நிலைமையா? திமுகவை சுளுக்கெடுத்த விஜய்..!.
இதனுடைய திமுக, அதிமுக கூட்டணிகளுக்கு இணையாக மூன்றாவது கூட்டணியை அமைக்க விஜய் முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க: மதுரையில் விஜய்! சீக்கிரம் சந்திப்போம் நண்பா, நண்பீஸ்.. செம குஷியில் ரசிகர்கள்..!