விஜய்க்கு ‘ஓ.கே.’ சொன்ன சங்கீதா... விவாகரத்து வழக்கு வாபஸ்?!... பின்னணியில் இருக்கும் 2 காரணங்கள் இதுவே...!
நடிகராக மட்டுமின்றி தற்போது தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியின் தலைவராகவும் விஜய் இருப்பதால் அவர் மீது கடும் விமர்சனங்களும் எழுந்தன.
விஜய் - சங்கீதா இடையிலான விவகாரத்து வழக்கு சமரச பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்கு வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஃபேமிலி மேன் என பெயர் எடுத்த விஜய் நடிகை ஒருவருடன் திருமணத்திற்கு மீறிய உறவில் இருக்கிறார் என சங்கீதா தனது விவகாரத்து மனுவில் குற்றச்சாட்டியதை அடுத்து இந்த வழக்கு பட்டி, தொட்டி எல்லாம் கவனம் பெற்றது. நடிகராக மட்டுமின்றி தற்போது தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியின் தலைவராகவும் விஜய் இருப்பதால் அவர் மீது கடும் விமர்சனங்களும் எழுந்தன.
சங்கீதா தனது விவகாரத்து மனுவில், விஜய்க்கு ஒரு நடிகையுடன் திருமணத்தை தாண்டிய உறவு இருப்பதாக புகார் தெரிவித்தார். 2021ம் ஆண்டில் அந்த உறவு குறித்து கண்டுபிடித்து கேள்வி கேட்டதற்கு, முதலில் விட்டுவிடுகிறேன் என்று கூறினார் விஜய். பின்னர் குற்ற உணர்வே இல்லாமல் நடிகையுடனான தொடர்பை தொடர்ந்தார்.
நடிகையும், விஜய்யும் சேர்ந்து பொது நிகழ்ச்சிகளுக்கு சென்றார்கள். அப்பொழுது எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் அந்த நடிகை வெளியிட்டதால் எனக்கும், என் பிள்ளைகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டது. விஜய் தன்னை முற்றிலும் ஒதுக்கி வைத்துவிட்டதாக மனுவில் குறிப்பிட்டிருந்தார் சங்கீதா. விஜயை விட்டு பிரிந்து லண்டனில் வசித்து வரும் சங்கீதா அங்கு அவரது குடும்ப தொழிலை கவனித்து வருவதாக கூறப்படுகிறது. 400 கோடி ரூபாய் சொத்துக்கு அதிபதியான சங்கீதா சொர்ணலிங்கம், விஜய் கொடுப்பதாக சொன்ன 225 கோடி ரூபாய் ஜீவனாம்சத்தை ஏற்றுக் கொண்டு விவகாரத்து வழக்கை வாபஸ் பெறவுள்ளார் என்ற செய்தி வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: காங்கிரஸ் - தவெக கூட்டணி... தற்கொலைக்கு சமம்..! காங்கிரஸ் மூத்த தலைவர் கோபண்ணா ஆதங்கம்..!!
இதனை சங்கீதா ஏற்றுக்கொண்டாரா? என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் இல்லாத நிலையில், சமரச பேச்சுவார்த்தை நடத்தி 225 கோடி ரூபாயை கொட்டிக்கொடுக்க விஜய்க்கு 2 முக்கிய காரணங்கள் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
அரசியலில் கால் பதித்துள்ள விஜய்க்கு தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள இந்த சிக்கல் பெரும் பின்னடைவாக மாறியுள்ளது. “வெறும் வாய்க்கு அவல் கிடைத்தது போல்” எதிர்க்கட்சியினர் கட்சி தலைவருக்கு “சுய ஒழுக்கம் ரொம்ப முக்கியம்...”, “குடும்பத்தையே பார்த்துக்க முடியாதவர் நாட்டை எப்படி பார்த்துக்கொள்வார்” என்றெல்லாம் சகட்டுமேனிக்கு விமர்சித்து வருகின்றனர். இந்த விவகாரம் விஜயின் அரசியல் பிம்பத்தை சிதைக்கும் வகையில் அமைந்துள்ளது. இது வர சட்டமன்ற தேர்தலிலும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதால், வழக்கை நீதிமன்றம் வரை கொண்டு செல்லாமல் சமரசமாக பேசி முடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
அடுத்ததாக, “எங்க அண்ணனுக்கு நான் தான் செய்வேன்” என விஜய்க்காக திமுக, அதிமுக, பாஜக, நாதக ஆகிய கட்சிகளின் ஐ.டி.விங்குகளிடம் வளைத்து வளைத்து வக்காலத்து வாங்கி வந்த தொண்டர்கள் படை, சங்கீதாவின் குற்றச்சாட்டால் அப்செட்டில் உள்ளனர். ஏற்கனவே தவெக சார்பில் விநியோகிக்கப்பட்ட 5000 வேட்புமனுக்களில் சொற்ப அளவிலேயே திரும்பி வந்துள்ள நிலையில், தேர்தலில் போட்டியிட ஆர்வமாக இருந்த பல முக்கிய வேட்பாளர்கள் கட்சியை விட்டு கழன்று செல்லும் மனநிலையில் உள்ளார்களாம். கரூர் சம்பவத்தின் போது கூட தூணாக நின்று காத்த தொண்டர்களின் இந்த மனமாற்றம், தமிழக வெற்றிக் கழகத்தின் எதிர்காலத்திற்கு ஏற்றது அல்ல எனக்கூறப்படுகிறது. இந்த இரண்டு காரணங்களால் தான் விஜய் சங்கீதாவுடனான விவாகரத்து விவகாரத்தில் சமரசம் பேச சம்மதித்ததாகவும், 225 கோடி ரூபாயை கொடுக்க ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: திருச்சி காப்பகத்தில் குழந்தைகளுக்கு சித்திரவதை...!! தவெக கடும் கண்டனம்..!!