எங்கள் இளைய காமராஜரே..! விஜயை ஆஹா.. ஓஹோ.. என புகழ்ந்த மாணவி..!
விஜயிடம் கல்வி விருது பெற்ற மாணவி ஒருவர் அவரை இளைய காமராஜர் என புகழ்ந்துள்ளார்.
கல்வியில் மாணவ, மாணவிகளின் ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில் கடந்த 2 ஆண்டுகளாக 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் சாதனை படைத்த மாணவ, மாணவிகளுக்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கல்வி விருதுகள் வழங்கி கவுரவித்து வருகிறார்.
2025 ஆண்டு 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொது தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிகளுக்கு இரண்டு கட்டங்களாக விஜய் பரிசுகளை வழங்கி வருகிறார். முதல் கட்டமாக பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி நிறைவடைந்த நிலையில் இன்று இரண்டாம் சட்டமாக கல்வி விருதுகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: 2ம் கட்ட கல்வி விருது வழங்கும் நிகழ்ச்சி..! மாமல்லபுரம் புறப்பட்டார் விஜய்..!
சாதனை படைத்த மாணவ மாணவிகளுக்கு தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் விருதுகளை வழங்கி வருகிறார். அப்போது, மாணவி ஒருவர் விஜயை இளைய காமராஜர் என புகழ்ந்துள்ளார். மேலும், தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய மாணவி, விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துகளை கூறினார். தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய்க்கு இளைய சமுதாயத்தின் ஆதரவு பெருகி வருகிறது. இதுபோன்ற கல்வி விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியின் மூலம் இளைய சமுதாயத்தின் பேராதரவை விஜய் பெற்று வருகிறார் என்பதில் எந்தவித மாற்ற கருத்தும் இல்லை.
இதையும் படிங்க: நாளை மாணவர்களை சந்திக்கிறார் விஜய்..! 2ம் கட்ட கல்வி விருது விழா..!