×
 

விஜய் பிரச்சாரத்திற்கு பல கெடுபிடிகள்... முடியவே முடியாது! திட்டவட்டமாக ஏற்க மறுக்கும் தவெக..!

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் சுற்றுப்பயணத்திற்கு பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்ட நிலையில் அதனை ஏற்க மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சியினரும் தங்களது சுற்றுப்பயணத்தை தொடங்கி உள்ளனர். அதன்படி தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் வரும் 13-ஆம் தேதி திருச்சி மாவட்டத்திலிருந்து தனது அரசியல் பிரச்சார சுற்றுப்பயணத்தை தொடங்க திட்டமிட்டுள்ளார். 13ஆம் தேதி காலை 10:30 மணி அளவில் சென்னையிலிருந்து திருச்சிக்கு செல்லும் விஜய் முதலில் .வி.எஸ். டோல்கேட், தலைமை தபால் நிலையம், மேலப்புதூர், பாலக்கரை, மார்க்கெட் வழியாக சென்று திருச்சி காந்தி மார்க்கெட், மரக்கடை எம்.ஜி.ஆர். சிலை அருகே உரையாற்றுவார் எனக் கூறப்பட்டுள்ளது.

கடந்த ஆறாம் தேதி இது தொடர்பாக தமிழக வெற்றிக்கழக பொதுச்செயலாளர் ஆனந்த் காவல் ஆணையரை சந்தித்து மனு அளித்திருந்தார். அப்போது பொதுக்கூட்டத்திற்கு மட்டுமே அனுமதி அளிப்பதாகவும் ரோடு நடத்த அனுமதி இல்லை என்று போலீசார் கூறியதாகவும் தெரிகிறது.

இது தவிர்த்து பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், போலீசாரின் நிபந்தனைகளை ஏற்க முடியாது என தமிழகவற்றைக் கழகத்தினர் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது. பொதுமக்களின் சிரமங்களை கருத்தில் கொண்டு ரோடு ஷோ நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் விஜய் வாகனத்தின் பின்னால் அதிக அளவில் வாகனங்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: நான் வரேன்! விஜய் சுற்றுப்பயணத்தின் முழு விவரம் வெளியானது... இனி கொண்டாட்டம்தான்

விஜய் பேசும் இடங்களை தவிர மற்ற இடங்களில் விஜய் பிரச்சார வாகனத்தின் வெளியே வரக்கூடாது எனவும் போலீசார் நிபந்தனை விதித்ததாக தெரிகிறது. காவல்துறையின் குறிப்பிட்ட நிபந்தனைகளை ஏற்க மறுப்பு தெரிவித்த நிலையில் மீண்டும் இன்று பேச்சு வார்த்தை நடைபெறுகிறது. 

இதையும் படிங்க: தவெகவை பார்த்தாலே திமுகவுக்கு அல்லு விடுது! விஜய் கடும் தாக்கு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share