“ஷப்பா இப்பவே கண்ண கட்டுதே”... சுற்றுபயணத்தில் விஜய்க்கு வந்த புது சிக்கல்.... தவெக நிர்வாகிகளால் தலைவலி...!
பெரம்பலூரில் தவெக நிர்வாகிகளி அலட்சியத்தால் இதுவரை காவல்துறையிடம் அனுமதி பெறவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தை ஆரம்பித்த விஜய், விக்கிரவாண்டியில் முதல் மாநாட்டையும், மதுரையில் இரண்டாவது மாநாட்டையும் வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளார். இதனிடையே 2026ம் ஆண்டு நடக்கவுள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு விஜய் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். வரும் 13ம் தேதி திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து தனது பரப்புரையை விஜய் தொடங்கவிருந்தார்.
ஆனால் அங்கு சாலை மிகவும் குறுகலாக இருப்பதால் வேறு இடத்தில் கூட்டத்தை நடத்தும் படி திருச்சி காவல்துறை அறிவுறுத்தியது. பலகட்ட முயற்சிகளுக்குப் பிறகு, திருச்சி காந்தி மார்க்கெட் மரக்கடை பகுதியில் விஜய் பரப்புரை மேற்கொள்ள காவல்துறையினர் அனுமதி அளித்துள்ளனர். அதே சமயம் 23 நிபந்தனைகளை போலீசார் விஜய்க்கு விதித்துள்ளனர்.
வருகிற 13 ஆம் தேதி தவெக தலைவர் விஜய் திருச்சியில் தன்னுடைய பரப்புரையை துவங்குகிறார். இந்த நிலையில் 13 ஆம் தேதியே பெரம்பலூரிலும் அவர் பிரச்சாரத்தை மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளுடைய அலட்சியத்தால் தற்போதுவரை அந்த மாவட்டத்தில் விஜய் பிரச்சாரத்திற்கு அனுமதி வழங்கவில்லை என்ற தகவலை மாவட்ட காவல்துறை தெரிவித்திருக்கிறது.
இதையும் படிங்க: விஜய்க்கு 23 நிபந்தனைகளை விதித்த திருச்சி காவல்துறை... என்னென்ன தெரியுமா?
இதனிடையே, தவெக நிர்வாகிகளுடைய அலட்சியத்தால் பெரம்பலூரில அனுமதி வழங்கப்படாமல் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து போலீசார் ஆலோசனை நடத்த அழைத்த போதும் அவர்கள் கலந்து கொள்ளவில்லை என கூறப்படுகிறது. பெரம்பலூர் மாவட்டத்தில குன்னம் மற்றும் பெரம்பலூர் பகுதியில் வரும் 13ம் தேதி தமிழக வெற்றி கழகத்தினுடைய தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக கடந்த 6ம் தேதி பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மனு அளித்திருந்தார்.
அதன் பிறகு தற்போதுவரை கட்சி நிர்வாகிகளை பலமுறை மாவட்ட காவல்துறை அழைத்தும், பேச்சுவார்த்தைக்கு செல்லவில்லை எனக்கூறப்படுகிறது. குன்னம் பேருந்து நிலையம் மற்றும் பெரம்பலூர் காமராஜர் வளைவு பகுதிகளில் பிரச்சாரம் செய்ய அனுமதி கேட்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பேச காவல்துறையினர் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டாலும் தவெக நிர்வாகிகள் சரியாக பதிலளிக்கவில்லை எனக்கூறப்படுகிறது. பெரம்பலூரில் பரப்புரை மேற்கொள்ள 2 நாட்களே உள்ள நிலையில், தவெக நிர்வாகிகள் காட்டி வரும் அலட்சியம் அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு புதிய தலைவலியாக மாறியுள்ளது.
இதையும் படிங்க: திமுக, அதிமுகவுக்கு இடையில நீ யாரு.... வார்த்தையை விட்ட விஜயை வச்சி செய்த எடப்பாடி பழனிசாமி...!