விறுவிறு சுற்றுப்பயணம்! ரூட்டை மாற்றிய விஜய்... எங்க பேச போறாரு தெரியுமா?
திருச்சியில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் விஜய் செல்லும் பாதையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
விஜய், தமிழக வெற்றிக் கழகத்தை 2024 பிப்ரவரி மாதம் தொடங்கிய பிறகு, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கட்சியை வலுப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். அவரது கட்சி, 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மக்களிடையே தனது கொள்கைகளையும், தொலைநோக்கு திட்டங்களையும் எடுத்துச் செல்வதற்காக பல்வேறு மாநாடுகளையும், சுற்றுப்பயணங்களையும் மேற்கொண்டு வருகிறது.
இதற்கு முன்னர், விக்கிரவாண்டியில் நடைபெற்ற தவெகவின் முதல் மாநில மாநாடு மற்றும் மதுரை பாரபத்தியில் நடைபெற்ற இரண்டாவது மாநில மாநாடு ஆகியவை கட்சியின் தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியிருந்தன. இந்த மாநாடுகளில், விஜய் சமூக நீதி, பெண்களுக்கான பாதுகாப்பு, மற்றும் மக்களின் அடிப்படை பிரச்சினைகள் குறித்து பேசியிருந்தார், இது அவரது அரசியல் பயணத்திற்கு வலுவான அடித்தளத்தை அமைத்தது.
திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே நடைபெறவிருக்கும் இந்த பிரச்சாரக் கூட்டம், விஜய்யின் மூன்று கட்டமாக திட்டமிடப்பட்ட 10 வார சுற்றுப்பயணத்தின் முதல் கட்டமாகக் கருதப்படுகிறது. 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் வரும் 13-ஆம் தேதி திருச்சி மாவட்டத்திலிருந்து தனது அரசியல் பிரச்சார சுற்றுப்பயணத்தை தொடங்க திட்டமிட்டுள்ளார்.
இதையும் படிங்க: அறிவு தீபம் ஏற்றும் ஆசிரியர்களுக்கு என் வாழ்த்துக்கள்.. தவெக தலைவர் விஜய் உருக்கம்..!!
திருச்சியில் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பாதை மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. சத்திரம் பேருந்து நிலையத்தில் விஜய் உரையாற்ற திட்டமிடப்பட்டிருந்தது. காவல்துறை அனுமதி மறுத்ததால் மரக்கடை எம்ஜிஆர் சிலை அருகில் விஜய் உரையாற்றும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. திருச்சி நகரில் பெரியளவு வாகன நெரிசல் தவிர்க்கப்படும் என கூறப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: அண்ணன் வராரு... வெலகு! செப். 13ல் விஜய் சுற்றுப்பயணம் தொடங்க இருப்பதாக தகவல்