விஜய்க்கு கிடைத்தது கிரீன் சிக்னல்... நாளைய விடியலுக்காக காத்திருக்கும் தவெக தொண்டர்கள்... !
கடலூரில் நாளை விஜய் பொதுக் கூட்டத்திற்கு 22 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.
2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றி கழகம் தனித்து 234 சட்டமன்ற தேர்தலும் களம் காண்கிறது. இந்த நிலையில் வேட்பாளர்களை ஆதரித்து கட்சியின் தலைவர்
விஜய் தமிழ்நாடு முழுவதும் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் இவர் பிரச்சாரம் செய்யும்போது பல்வேறு கட்டுப்பாடுகள் என்பது காவல்துறை விதிக்கப்படுகிறது. குறிப்பாக கூட்ட நேரிசல் காரணமாக இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 9ம் தேதி மற்றும் 11ஆம் தேதி கடலூருக்கு விஜய் வருகை தர உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் அந்த நிகழ்ச்சி என்பது இரண்டு முறையும் ரத்து செய்யப்பட்டது. பல்வேறு காரணங்களுக்கு ஒன்பதாம் தேதி புதுச்சேரி மாநில தேர்தல் மற்றும் 11 ஆம் தேதி வேறொரு நிகழ்ச்சிக்காகவும் விஜய் பரப்புரையானது ரத்து செய்யப்பட்டது.
இந்த நிலையில் கடலூர் பிரச்சாரத்திற்கு எப்போது வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நாளை பிரச்சாரத்திற்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. குறிப்பாக காலை 10 மணியிலிருந்து 12 மணி வரை கடலூர் விஜயநகர் மைதானத்தில் விஜய் பிரச்சாரம் மேற்கொள்ளதாகவும், கடலூர் மாவட்டத்தில் உள்ள ஒன்பது சட்டமன்ற தொகுதிக்கும் வேட்பாளர்களை ஆதரித்து ஒரே இடத்தில் மாபெரும் பொதுக்கூட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதனிடையே, கடலூர் மாவட்ட தமிழக வெற்றிக்கழக வேட்பாளர்களை ஆதரித்து நாளை காலை 11 மணி முதல் 2 மணி வரை விஜய் பொதுக்கூட்டத்திற்கு 22 நிபந்தைகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஹெலிகாப்டர் மூலம் கடலூர் அண்ணா விளையாட்டு அரங்கிற்கு வரும் விஜய் அருகில் உள்ள மஞ்சைநகர் மைதான பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.
இதையும் படிங்க: பெரம்பூரில் 16வது நம்பர் நோட்டாவா.? கையும் களவுமாக பிடித்த தவெக நிர்வாகிகள்..!
கூட்டத்தில் 12000 பேர் பங்கேற்பதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 11 மணி முதல் 2 மணிக்குள் கூட்டத்தை முடித்து விட வேண்டும். 12 ஆயிரம் பேருக்கு 100 பேருக்கு ஒருவர் என தன்னார்வலர்கள் பாதுகாப்பு ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும்.
தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் முழுமையாக கடைபிடிக்க வேண்டும். மருத்துவம் மற்றும் குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும்.
அண்ணா விளையாட்டு அரங்கின் சுற்றுச்சுவர் உயரம் குறைவாக இருப்பதால் அதனை உயர்த்தி ஷீட் அடித்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும்- உள்ளிட்ட 22 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 9 மற்றும் 11 ம் தேதிகளில் அனுமதி வழங்கப்பட்டும் பிரச்சாரம் ரத்து செய்யப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் அனுமதி வழங்கப்பட்டது.
இதையும் படிங்க: பெரம்பூரில் வீடு வீடாக சென்று வாக்குச் சேகரிக்க விஜய் திட்டம்..! திருச்சி கிழக்கிலும் அனுமதி கேட்டு விண்ணப்பம்..!