×
 

ரெடியா மாமே? தவெக மாநாடு... தெறிக்கவிடும் தொண்டர்கள்..!

வரும் 21ஆம் தேதி தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநாடு மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெறும் நிலையில் தொண்டர்கள் உற்சாகமாக தயாராகி வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகம், தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் புதிய அத்தியாயமாக உருவெடுத்து, மக்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்து வரும் ஒரு அரசியல் கட்சி. இதன் முதல் மாநில மாநாடு 2024 அக்டோபர் 27 அன்று விழுப்புரம் மாவட்டத்தின் விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த மாநாடு, தமிழக அரசியல் களத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்தது. இந்நிலையில், தற்போது இக்கட்சியின் இரண்டாவது மாநில மாநாடு வரும் 21 ஆம் தேதி மதுரையில் நடைபெறுகிறது.

மாநாட்டிற்கான ஏற்பாடுகள் மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில், பாரப்பத்தி அருகே உள்ள கூடக்கோவில் பகுதியில் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சுமார் 237 முதல் 500 ஏக்கர் பரப்பளவில் மாநாட்டு இடம் தயாராகி வருகிறது, இதில் 217 ஏக்கர் வாகன நிறுத்தத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. 

சுமார் 10 லட்சம் தொண்டர்கள் அமரும் வகையில் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு மதுரையில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த போதிலும், அனுமதி கிடைக்காததால் விக்கிரவாண்டியில் நடைபெற்றது. அந்த மாநாடு லட்சக்கணக்கான மக்களின் பங்கேற்புடன் பெரும் வெற்றி பெற்றது. இந்த நிலையில் வரும் 21ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநாடு நடைபெற உள்ளது. இதற்காக தமிழக வெற்றி கழகத் தொண்டர்கள் உற்சாகமாக தயாராகி வருகின்றனர்.

பேனர்கள், போஸ்டர்கள் என உற்சாகமாக மாநாட்டிற்கு தயாராகி வருகின்றனர். இணையதளத்தில் தமிழக வெற்றி கழகத்தின் மாநாடு தொடர்பான போஸ்டர் ஒன்று வைரலாகி வருகிறது. அதில் ரெடியா மாமே… என மாநாட்டுக்கு அழைப்பு விடுப்பது போன்ற வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதே போல மாநாட்டிற்கான அழைப்பு விடுக்கும் வகையில் தமிழக வெற்றி கழகத் தொண்டர்கள் உற்சாகமாக தயாராகி வருகின்றனர்.

இதையும் படிங்க: மாநிலம் அதிர மாநாட்டுக்கு தயாராவோம்! நம்ப தான் முதன்மை சக்தி.. விஜய் உத்வேகம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share