×
 

விஜய் கிட்ட பேசிக்கலாம் கம்முனு இருங்க... காரை வழிமறித்த நிர்வாகிகளை அமைதிப் படுத்திய நிர்மல் குமார்...!

விஜயின் காரை வழிமறித்த தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகளை நிர்மல் குமார் பேச்சுவார்த்தை நடத்தி அமைதி படுத்தினார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழக வெற்றி கழகத்திற்கு ஆண் மாவட்ட பொறுப்பாளர் நியமிக்கப்பட இருப்பதாக வெளியான தகவலை அடுத்து பெண் தொண்டர்கள் அதிருப்தியில் பனையூருக்கு படையெடுத்துள்ளனர். இதன் காரணமாக பெண் பவுன்சர்கள் பனையூரில் குவிக்கப்பட்டனர். தூத்துக்குடியில் இருந்து அஜிதா ஆக்னல் என்ற தற்போதைய தூத்துக்குடியின் நிர்வாகியின் பெயர் லிஸ்டில் இல்லை என்ற தகவல் வெளியானதாக தெரிகிறது. இதனால் பனையூர் அலுவலக வளாகத்தில் கண்ணீருடன் பெண் நிர்வாகி காத்துக்கொண்டு இருந்து வருகிறார்.

இன்று பொறுப்பாளர்களை விஜய் அறிவிக்க உள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில், பனையூர் அலுவலகத்திற்கு வந்த விஜயின் காரை தூத்துக்குடி நிர்வாகி அஜிதா ஆக்னல் மற்றும் பிற நிர்வாகிகள் முற்றுகையிட்டனர். தொடர்ந்து அங்கிருந்த மற்ற நிர்வாகிகள் மற்றும் பவுன்சர்கள் அவர்களை அப்புறப்படுத்தி விஜயின் காரை கட்சி அலுவலகத்திற்குள் செல்ல வைத்தனர். மெதுவாக மோதி தள்ளியபடி கார் சென்றது. தனக்கு பொறுப்பு வழங்கவில்லை எனக் கூறி அஜிதா ஆக்னல் மன வருத்தத்துடன் கண்ணீர் சிந்தினார். 

விஜயின் காரை வழிமறித்த பெண் நிர்வாகியை அழைத்து தமிழக வெற்றி கழகத்தின் இணை பொதுச் செயலாளர் நிர்மல் குமார் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அமைதியாக இருங்கள் என்றும் விஜய்யிடம் பேசிக் கொள்ளலாம் என்றும் தெரிவித்து அவர்களை அமைதி படுத்தியதாக கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: வரலாறு திரும்புகிறது... செங்கோட்டையனை புகழ்ந்து தள்ளிய தவெக நிர்வாகிகள்...!

இந்த நிலையில், தமிழக வெற்றி கழகம் முற்றிலும் ஜனநாயகம் உள்ள கட்சி என அக்கட்சியின் இணை பொதுச் செயலாளர் நிர்மல் குமார் தெரிவித்து உள்ளார். விஜயின் காரை பெண் நிர்வாகி வழிமறித்த விவகாரம் தொடர்பாக நிர்மல் குமார் செய்தியாளர்களிடம் பேசிய போது இவ்வாறு கூறினார். திமுகவை விட தமிழக வெற்றி கழகத்தில் ஜனநாயகம் உள்ளது என்றும் தெரிவித்தார். திமுகவை விட அதிக நிர்வாகிகளும், ஜனநாயகமும் தங்களிடம் உள்ளது என்றும் விளக்கம் அளித்தார். குறுநில மன்னர்களைக் கொண்ட கட்சியாக திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளது என்றும் விமர்சித்தார். 

இதையும் படிங்க: கரூர் பெருந்துயரம்... தவெக மாநில நிர்வாகிகளிடம் கிடுக்கிப்பிடி விசாரணை..! சிபிஐ அதிரடி...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share